பக்கம்:நாவுக்கரசர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தொண்டை நாட்டுத் திருத்தல வழிபாடு

தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் முப்பத்திரண்டு. இவற்றுள் சிலவற்றைத்தான் அப்பர் பெருமான் வழிபடு கின்றார். அந்தச் சிலவற்றுள் ஒன்றிரண்டிற்குப் பதிகம் இல்லை. இக்குறிப்பை நினைவிற்கொண்டு அப்பர் பெருமான் அடிச் சுவட்டையொட்டித் தொண்டை நாட்டின் திருத்தல வழிபாட்டைத் தொடங்குவோம்.

திருவண்ணமாலையில் (நடுநாடு) அண்ணாமலை யாரைத்தொழுத பின்னர் அப்பர் பெருமானின் தொண் -ைநாட்டு வழிபாடு தொடங்குகின்றது.முதலில் திருவோத் தூரை அடைகின்றார். அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் முக்கட்பெருமானைப் போற்றுகின்றார் (பதிகம் இல்லை). அடுத்து மலைமகளார் செய்த வழிபாட்டினை ஏற்றருளும் திருவேகம்பப் பெருமானை இறைஞ்சிப் போற்ற விரும்பிக்

1. ஒத்துர் (திருவேதிபுரம், திருவத்துரர்): காஞ்சியி லிருந்து வ்ந்தவாசி செல்லும் பேருந்து வழி. கோயிலின் அருகில் செய்யாறு ஓடுகின்றது. சிவபெருமான் தேவர் முனிவர் கட்கு வேதப் பொருளை ஒதிய தலம் (ஒத்து. வேதம்). சம்பந்தர் அடியார் வேண்டுகோட்கிணங்கி ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலம். தைமாதம் இரத சப்தமியைத் தேர்த்திருநாளாகக் கொண்ட பத்துநாள் திருவிழாச் சிறப்புடையது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/259&oldid=634262" இலிருந்து மீள்விக்கப்பட்டது