பக்கம்:நாவுக்கரசர்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. திருப்பூந்துருத்தி நிகழ்ச்சிகள்

AMMAMAMAeAAAA


SAeAeAMAAA AAAA AAAA AAAAS AAAAAS

திருவையாற்றிறைவன் தானே கயிலைக் காட்சி நல் கினான் என்று கருதிய நாவுக்கரசர் அத்தலத்தில் தங்கி

1. ஐயாறு (திருவையாறு) : தஞ்சையிலிருந்து வட திசையில் 7 கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. இத் தலம் செல்லுங்கால் பேருந்து 5 ஆறுகளையும் பாலத்தின் மீது கடப்பதைக் காணலாப், கயிலை காணச் சென்ற அப்பர் இவ்வூர்க் குளத்தில் எழுந்து கயிலாயக் காட்சி கண்டனர். இதன் நினைவாக தென் கயிலாயம் என்ற உட் கோயிலில் ஆடி அமாவாசையில் உற்சவம் நடைபெறு கின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிக்கு வெள்ளக் காலத்தில் ஆற்றில் மணல் வழி தோன்றி சேவித்த தலம். சித்திரைப் பெருவிழாவில் இத்தலத்து இறைவன் தன்னைத்தானே பூசித்த நிகழ்ச்சி ஆன்ம பூசை என்ற உற்சவமாக நடை. பெறுகின்றது. இப்பெருவிழாவின் இறுதியில் சப்த ஸ்தான உற்சவம் (ஏழுர்த் திருவலம்) மிகு புகழ் வாய்ந்தது. நந்தி கேசுவரரும் அவர் தேவியாரும் வெட்டிவேர்ப் பல்லக்கில் முன்செல்ல ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும், அழகிய கண்ணாடிப் பல்லக்கில் திருப்பழனம், திருச் சோற்றுத் துறை, திருவேதிகுடி, திருக் கண்டியூர், திருப்பூந் துருத்தி, திரு நெய்த்தானம் ஆகிய 6 தலங்கட்குச் சென்று, அங்குள்ள மூர்த்திகளோடெழுந்தருளி மீண்டும் திருவை யாறு அடையும்போது ஏழு மூர்த்திகளும் ஒருங்கே காட்சி யருளி, கோயில் பிரகாரத்தில் மெளனவலம் வருவது 30 மணி நேரம் நடைபெறும் நிகழ்ச்சியாகும். ஆற்றிலிருந்து தெற்குச் சந்நிதிக்குள் நுழையும்போது ஆட்கொண்டார் சந்நிதியும் குங்குலியக் குழியும் உள்ளன. அறம் வளர்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/290&oldid=634298" இலிருந்து மீள்விக்கப்பட்டது