பக்கம்:நாவுக்கரசர்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூந்துருத்தி நிகழ்ச்சிகள் 249

பேசப் பெரிதும் இனியாய் நீயே,

பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே,

தேச விளக்கெலாம் ஆனாய் நீயே,

திருவையா றகலாத செம்பொற் சோதி! (1)

என்பது தமிழ் மணங் கமழும் முதல் திருத்தாண்டக வாடா நறுமலர்,

இவர் வழிபடப் பயன்படுத்திய இரண்டு திருக்குறுந் தொகை மாலைகளையும் காண்போம். முதல் மாலை ‘சிங்தை வாய்தல் (5.27) என்ற முதற் குறிப்புடையது. இதில்,

நெஞ்சம் என்பதோர் நீள்கயங் தன்னுளே வஞ்சம் என்பதோர் வான்சுழிப் பட்டுநான் துஞ்சும் போழ்துகின் நாமத் திரு எழுத்(து) அஞ்சு தோன்ற அருளும் ஐயாறரே. (3)

என்பது மூன்றாவது பாடல். அடுத்துப் பாடி வழிபட்டது “சிங்தை வண்ணத்த’ (5.28) என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந்தொகை மாலையால் இதில்,

விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும் விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும் அரும்பின் வண்ணமும் மாவர் ஐயாறரே. (7)

என்பது தமிழ் மணங் கமழும் ஏழாவது நறுமலர்.

இவற்றையடுத்தவை இப்பெருமான் ஐயாறரின் மீது சூட்டிய மூன்று திருநேரிசைச் செந்தமிழ் மாலைகள். இவற்றுள் முதலாவது கங்கையைச் (4 38) என்ற முதற் குறிப்புடைய திருமாலை. இதில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/292&oldid=634300" இலிருந்து மீள்விக்கப்பட்டது