பக்கம்:நாவுக்கரசர்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 நாவுக்கரசர்

வாக்கினால் இன்பு ரைத்து

வாழ்கிலார் தம்மை எல்லாம்

போக்கினால் புடைத்த வர்கள்

உயிர்தனை உண்டு மால்தான்

தேக்குநீர் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தை

நோக்கினால் வணங்கு வார்க்கு

நோய்வினை நுணுகு மன்றே(8)

என்பது இப்பதிகத்தின் எட்டாவது வாடாத நறுமலர்.

இராமேச்சரத்திலிருந்து திருநெல்வேலி (ப தி க ம்

தாழ்ந்தும் வரவில்லை. சீ த ா பி ரா ட் டி ய | ர் மணலைப் பிடித்து இலிங்கமாக்க அதனை இராமர் வழி பட்டனர். இந்த இலிங்கமே கருவறையில் இருப்பது. அநுமன் தாமதித்துக் கொணர்ந்த காசிலிங்கம் இராம லிங்கம் சந்நிதியின் வடக்கில் சில அடி தூரத்துக்குள் உள்ளது. இரண்டையும் திருத்தலப் பயணிகள் வழிபடுவது வழக்கமாக உள்ளது. அம்பிகை அழகும் அருளும் நிரம்பிய பர்வதவர்த்தினி (மலைவளர் காதலி) தாயுமான அடி களின் பாடல்கள் அம்மையின் சிறப்பை நன்கு விளக்கும்.

5. நெல்வேலி (திருநெல்வேலி) : மதுரை . திருநெல் வேலி இருப்பூர்தி வழியில் திருநெல்வேலிச் சந்திப்பிலிருந்து 2 கல் தொலைவிலுள்ளது. தாமிரபரணி என வழங்கும் தண் பொருநையாற்றங்கரையிலுள்ளது. ஆற்று வெள்ளச் சேதமின்றிச் சிவபெருமான் நிவேதனத்துக்குச் சேமிக்கப் பெற்ற நெற்களஞ்சியத்தை வேலி கட்டிக் காத்தமையால் நெல்வேலியாயிற்று. நடராசரின் 5 சபைகளுள் இங்குள்ளது தாமிர சபை என்னும் செப்பறை. இறைவன் சந்நிதிக் ரில் ஏழிசை ஒலி எழுப்பும் கருங்கல் தூண்கள் உள்ளன. ஒரு சிறு குச்சியினால் தட்டிக் கேட்கலாம். அம்மை காந்தி மதியின் திருவுருவம் அழகும் அருளும் நிரம்பியது. ஆற்றின் நடுவில் குறுக்குத்துறை முருகன் கோயில் சிறப்புடையது. ஆற்றங் கரையிலுள்ள ஓர் ஊர்ப்பகுதி சிந்து பூந்துறை’ என்று இன்றும் வழங்கப்பெறுகின்றது. ... “

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/309&oldid=634320" இலிருந்து மீள்விக்கப்பட்டது