பக்கம்:நாவுக்கரசர்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இறைவன் திருவடிப் பேறு

-

“பொய்ப் பாசம் போக்கும் சிந்தையினரான நாவுக்கரசர் பெருமான் பூம்புகலூர்ப் பெருமான் திருவடி களை வணங்கி உழவாரத் தொண்டு புரிந்து காலங் கழிக் கின்றார். வழிபாட்டு முறையில் சில செந் தமிழ் மாலை களால் இறைவனை வழுத்துகின்றார். செய்யர் வெண் ணுாலர் (4.16) என்ற முதற் குறிப்புடைய பதிகம் பாடு கின்றார். இதில்,

செய்யர் வெண்ணுலர் கருமான் மறிதுள்ளும் கையர் கனைகழல் கட்டிய காலினர் மெய்யர் மெய்ங்கின்ற வர்க்கலா தவர்க்கென்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே. (1)

என்பது முதற் பாடல். புகலூர்ப் புரிசடையர் உண்மை வழி நில்லாதவர்க்குப் பொய்யானவர் என்கின்றார் இதில்.

இதனையடுத்து பகைத்திட்டார் (4.54) என்ற திரு நேரிசைச் செந்தமிழ் மாலையைப் புகலூர்ப் பெரு மானுக்குச் சூட்டி மகிழ்கின்றார். இதில், -

பொறியிலா அழுக்கை யோம்பிப்

பொய்வினை மெய்யென் றெண்ணி

நெறியலா நெறிகள் சென்றேன்; -

தேனே திே ஏதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/311&oldid=634323" இலிருந்து மீள்விக்கப்பட்டது