பக்கம்:நாவுக்கரசர்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 நாவுக்கரசர்

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ;

துணையாயென் நெஞ்சங் துறப்பிப் பாய்நீ;

இப்பொன்;ே இம்மணி;ே இம்முத் தும்;ே

இறைவன் ஏறுர்ந்த செல்வன் நீயே. (1)

என்பது முதற் பாடல்.

சங்கநிதி பதுமகிதி இரண்டும் தந்து

தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்த ரல்லாராகில்; அங்கமெலாம குறைந்தழுகு தொழுகோ யராய்

ஆவுரித்துத் தினறுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரநதார்க் கன்ப ராகில்

அவர்கண்டீர் யாம்வணங்கும கடவுளாரே. (10)

என்பது பத்தாவது பாடல். இந்த இரண்டு பதிகங்களையும் பாடிப்பாடி இறைவனின் அகிலம் தழுவிய (Cosmic vision) காட்சியை மனத்தில் இருத்தலாம்.

திருப்புகலூரில் இவ்வாறு கைத் தொண்டும் மனத் தொண்டும் புரிந்து வரும் நாட்களில்தான் எண்ணிறந்த வண்டமிழ் மாலைகள் மொழிவார்’ என்கின்றார் சேக் கிழார் பெருமான். அவை நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், மன்றுறைவார் வாழ்பதிகள் வழுத்து திருத்தாண்டகம் (கேrத்திரக்கோவை), குறைந்த திரு நேரிசை, தனித்திரு நேரிசை, ஆருயிர்த் திருவிருத்தம், தசபுராணத் தடைவு, பாவநாசத் திருப்பதிகம், இறை வனை நேர்பட நின்று அறைகூவும் சரக்கறைத் திருப்பதிகம் முதலிய செந்தமிழ்ப் பாமாலைகள் இங்கு அருளிச் செய்யப் பெற்றதாகக் கூறுவர் சேக்கிழார் பெருமான். இவற்றின் விவரங்களை விரிவஞ்சி இவண் கூறவில்லை.

1. பெ. பு. திருநாவுக். 413 2. டிெ 414, 415.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/313&oldid=634325" இலிருந்து மீள்விக்கப்பட்டது