பக்கம்:நாவுக்கரசர்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நாவுக்கரசர்

மாகி வந்த அந்த அரம்பையர்களை நோக்கி, உம்மால் எனக்கு இங்கு ஆகவேண்டிய குறை என்ன உளது: யான் திருவாரூர்ப் பூங்கோயிலமர்ந்த பெருமானுக்கு ஆளாயுள் ளேன்; நீங்கள் வீணாக ஏன் அலைகின்றீர்? நும்மால் அலைக்கப்படும் எளிமையுடையேன் அல்லேன். நீவிர் என்னைத் துன்புறுத்தாதீர்’ என்ற கருத்துடன் ‘பொய் மாயப் பெருங்கடலில்’ (6.27) எனத் தொடங்கும் திருத் தாண்டக மாலையால் தெருட்டுகின்றார்.

பொய்மாயப் பெருங்கடலில் புலம்பா கின்ற

புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் இம்மாயப் பெருங்கடலை அளித்துத் தின்பீர்க்

கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்

தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும் எம்மான்தனடி தொடர்வா னுழிதர் கின்றேன

இடையிலேன் கெடுவீர்காள் இடரேன் மின்னே. (1)

என்பது முதற் பாடல். எல்லாப் பாடல்களையும் படித்து அநுபவிக்க வேண்டும்; அப்பொழுதுதான் அப்பர் பெரு மானின் உள்ளக் கிடக்கையை நன்கு அறிந்து கொள்ள முடியும். அடிகளது உள்ள உறுதிப்பாட்டை உள்ளவாறு அறிந்த உம்பர் மகளிர் தங்களால் செய்யத்தக்கது யாது மில்லை எனத் தெளிந்து நாவுக்கரசரை வணங்கிச் செல்லு கின்றனர்8.

மன உறுதியில் தளராத அப்பர் பெருமானின் இந்த மன நிலையினை உலகமேழும் அறிந்து வணங்கு கின்றனர். பக்தியே வடிவான நாவுக்கரசர் சிவபிரானது திருவருள் பெருக்கத்தில் ஒடுங்கும் மீளாத பேரின்ப நிலையை அடையும் கால்ம் அண்மையிலிருப்பதை உணர் கின்றார். தம் அந்தக் கரணங்கள் புறத்தே சென்று பட்டி

3. பெ. பு. திருநாவுக், 416-424

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/315&oldid=634328" இலிருந்து மீள்விக்கப்பட்டது