பக்கம்:நாவுக்கரசர்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பல்வேறு பொதுப் பதிகங்கள்

AMSeSASASJSAAAAAA AAAA AAAASASASS

  • A * .



நாவுக்கரசர் தல வழிபாட்டின்போது புனைந்த செந்தமிழ் மாலைகளை இதுகாறும் கண்டும், அப்பெரு மானுடன் வழிபட்டும் சுவைத்தோம். பக்திப் பெருக்கிலும் திளைத்தோம். பூந்துருத்தி வாழ்க்கையும் புகலூரில் இருப்பும் பல்வேறு திருப்பதிகங்களை நமக்கு நல்கியுள்ளன. அவற்றையும் கண்டு, சேவித்து, மகிழ்வோம்.

‘பூங்துருத்தில் வாழ்வில்: நேர்ந்தொருத்தி’ (6.93) என்ற முதற் குறிப்பையுடைய தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம்’ என்ற பெயரைப் பெறுகின்றது. இதில்,

கலஞ்சுழிக்கும் கருங்கடல்சூழ் வையந் தன்னில்

கள்ளக் கடலி லழுந்தி வாளா

கலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்

நம்பன்றன் அடியிணைக்கே கவில்வா யாகில்

அலஞ்சுழிக்கும் மன்னாகக் தன்னான் மேய

அறுமறையோ டாறாங்க மானார் கோயில்

வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்

வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே. (6)

என்பது ஆறாவது பாடல். இதில் வலஞ்சுழியே வலஞ் சுழியே என்பீ ராகில் வல்வினைகள் தீர்ந்து வானாளலாம் என்பது போல, ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு தலம் சொல்லப்பெற்றுப் பலனும் கூறப்பெறுகின்றது. இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/318&oldid=634331" இலிருந்து மீள்விக்கப்பட்டது