பக்கம்:நாவுக்கரசர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxix

முறை செம்முறையாகும். வேட்களம், கழிப்பாலை ஆகிய இருதலங்கள்பற்றிய திரு. இரெட்டியாரவர்களின் குறிப்பு கள் (பக். 82, 83) வருமாறு:

“வேட்களம் : சிதம்பரம் இருப்பூர்தி நிலையத்தி விருந்து கல் தொலைவு. பேருந்து வசதியுண்டு. அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தின் கீழ்க் கோடியில் உள்ளது. அருச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற தலம். சம்பந்தர் இத்தலத்தைத் தம் தங்குமிட மாக வைத்துக் கொண்டு தில்லைக்கு அவ்வப்போது வழிபடச் செல்வார் என்று பெரிய புராணம் கூறும்,

கழிப்பாலை : சிதம்பரம் இருப்பூர்தி நிலையத்தி லிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. பழைய தலத்தை கொள்ளிட நதி வெள்ளம் அடித்துச் சென்றது. இப் போதுள்ள கோயில் நெல்வாயில் ஆகிய சிவபுரியில் ஒரு தனிச் கோயிலாக உள்ளது.”

பேச்சாளர் பற்றி, சில சொல்லல் தேற்றாதவரே, பல சொல்லக் காமுறுவர் என்னும் வள்ளுவர் கணிப்பு எழுத் தாளருக்கும் பொருந்துவதாகும். எதுகை மோனைச் சொல்லலங்காரப் புனைவுகளில் கருத்தினைப் புதைத்து விடும் இயல்பு திரு. இரெட்டியாரவர்களிடம் இருந்த தில்லை. இவர் காவியமாயினும், கவின்கலையாயினும், அறநூலாயினும் அறிவியலாயினும் தாம் கூறும் செய்தி களை எளிமையும் தெளிவும் பெற விளக்குவார். வேட்களம் கழிப்பாலை ஆகிய இரண்டு தலங்களையும் பற்றிய செய்திகள் சில வரிகளில் அமைந்துள்ளனவேனும், அவற்றின் இருப்பிடம், பண்டைநலம், அண்மைக் காலச் சிறப்பு ஆகியவற்றைத் தக்க சான்றுடன் காட்டுவனவாக அமைந்துள்ளன. சமயம், தத்துவம், இலக்கியம், வரலாறு, முதலிய பல்துறை நாட்டமுடையவர்க்கும் பெரிய புராணம் அவ்வவ்துறைச் சிறப்புமிக்க நூலாக விளங்கி இன் பஞ் செய்வது போல, திரு. இரெட்டியாரவர்களின் நாவுக்கரசர் நூலும், பல்துறை நாட்டமுடைய வாசகர்களுக்கும் அவரவர் சுவைக்கும் நிலைக்கும் ஏற்றவாறு இன்புறுத்தி இதந்தரும் ஒன்றாக அமைந்துள்ளது. நாவுக்கரசர் வரலாற்று வழித் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாற் பற்ற இடங்களிலும், சைவப் பயிர் வளர்க்கும் பக்திப் பண்ணைகளாகத் திகழும் திருத்தலங்களுக்குப் பயணஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/32&oldid=634334" இலிருந்து மீள்விக்கப்பட்டது