பக்கம்:நாவுக்கரசர்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 நாவுக்கரசர்

ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்

ஆறு சூடிய அண்ட முதல்வனார்

ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள்

ஆறு போலெம் அகத்துறை ஆதியே.(6) என்பது ஆறாவது பாடல். இந்தப் பதிகம், விடந்தீர்த்த பதிகம். இவை ஒன்று முதல் பத்து வரை எண்ணலங்கார மாக்கிப் பாடியவை. பெரும்பாலும் இவ்விருபதிகங்களில் ஒரே செய்திகள் அதிக வேறுபாடின்றிப் பாடப்பெற் றுள்ளன. இதில் திரிபணி திகழ்கின்றது. ஒன்று...பத்து” இவை மந்திர சொரூபமானவை என்பர் அறிஞர்கள். இதுவும் ஏவிலானை (5.91) என்பதும் தனித் திருக்குறுந் தொகை'யாகும்.

கண்டுகொள்ளரி (5.92) என்ற முதற் குறிப்புடைய குறுந்தொகையில்,

படையும் பாசமும் பற்றிய கையினிர்

அடையன் மின்தம தீசன் அடியரை

விடைகொ ளுர்தியி னான்.அடி யார்குழாம்

புடைபு காதுநீர் போற்றியே போமினே. (7)

என்பது ஏழாவது பாடல். இஃது எமது தர்களை நோக்கிப் பேசுவதாக அமைந்தது; அவர்கட்கு எச்சரிக்கை விடுக்கின்றார். எங்கள் அடியவரிடம் சேர்ந்திராகில் எம் பிரான் கழலடிகள் உம்மைச் சுட்டு எரித்துவிடும்’ என்ற கருத்துடையதால் இது “காலபாசத் திருக்குறுந்தொகை’ ஆயிற்று.

‘காசனைக் கனலை (5.98) என்ற முதற் குறிப்பினை யுடைய பதிகத்தில், -

ஈசன் என்னை யறிந்த தறிந்தனன் ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால் ஈசன் சேவடி யேத்தப்பெற்றேன்.இனி ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே. (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/321&oldid=634337" இலிருந்து மீள்விக்கப்பட்டது