பக்கம்:நாவுக்கரசர்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 - - நாவுக்கரசர்

என்பது முதற் பாடல். இஃது எந்தை பிராணிரே என்று இறும் பதிகம். முதற் பாடலில் என் உள்ளத்துள்ளது: என்று குறித்தலால் மனத்தொகை என்னும் குறுந்தொகை யாகின்றது என்பர் சிவக் கவிமணி. பதிகம் மனத்தில் தொக்கது என்று பாடப்பெற்றுள்ளதால் இப் பெயர் பெற்றது என்றும் கொள்ளலாம். (வெள்ளை வாரணனார்)

சிந்திப்பார் மனத்’ (5.97) என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந்தொகையில்.

சிந்திப் பார்மனத் தான் சிவன் செஞ்சுடர் அந்தி வான்கிறத் தான்.அணி யார்மதி முந்திச் சூடிய முக்கண்ணி னானடி வந்திப் பாரவர் வானுல காள்வரே. (1)

என்பது முதற் பாசுரம். இதில் பதிகம் பத்துடையது என்ற வரம்பு மீறித் திருமுறைகளில் முப்பது பாசுரங்களைப் பெற்ற ஒரே ஒரு பெரும்பதிகம், உயிர் வருக்க மோனை”, உயிர் மெய் வருக்க மோனை’ என்னும் அணிவரப் பாடிய பதிகம். சிந்திப்பார் மனத்தான் என இப்பதிகம் தொடங்கு வதால் இது சித்தத் தொகைக் குறுந்தொகை’ என்ற பெயர் பெறுகின்றது. -

நீரலைத்ததோர் (5.98) என்ற முதற் குறிப்புடைய பதிகத்தில்,

வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே

வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார்

கள்ளத் தைக்கழி யம்மன மொன்றிகின்(று) .

உள்ளத் தில்லொளி யைக்கண்ட துள்ளமே. (3)

என்பது மூன்றாவது பாடல். ஒவ்வொரு பாடலிலும் கண்டது என் உள்ளமே என்று உள்ளத்தில் கண்ட - வற்றையே பாடப் பெற்றிருப்பதால் இஃது உள்ளக் குறுங் - தொகை ஆகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/323&oldid=634339" இலிருந்து மீள்விக்கப்பட்டது