பக்கம்:நாவுக்கரசர்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு பொதுப் பதிகங்கள் 283

அங்கத்தை மண்ணுக் காக்கி

ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாக்கிப்

பாவித்தேன் பரமா! நின்னைச் சங்கொத்த மேனிச் செல்வா !

சாதல்நாள் நாயேன் உன்னை எங்குற்றாய் என்ற போதால்

இங்குற்றேன் என்கண் டாயே (8) என்பது எட்டாவது பாடல். ஒரு தலத்திற்குரிமையின்றித் தனித்தமைந்திருப்பதால் இது தனித்திரு நேரிசை ஆகின் றது. மருளவா’ (4.76), கடும்பகல் (4.77) என்ற முதற் குறிப்புடைய திருநேரிசைப் பதிகங்களும் இவ்வகையினவே. இம்மூன்றின் பாடல்களும் பக்தியதுபவத்தின் கொடு முடிக்கு இட்டுச் செல்பவை.

  • முத்தினை (4.74) என்று தொடங்கும் திருநேரிசைப் பதிகத்தில்,

முன்பனை உலகுக் கெல்லாம்

மூர்த்தியை முனிகள் ஏத்தும் இன்பனை இலங்கு சோதி

இறைவனை அரிவை அஞ்ச வன்பனைத் தடக்கை வேழக்

களிற்றினை யுரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம்

அழகிதா கினைந்த வாறே. (2) என்பது இரண்டாம் பாடல். (சிவபெருமானை) நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே என்று ஒவ்வொரு பாடலும் இறுவதால் இது கினைந்த திருநேரிசை’ என்ற திருநாமம் பெறுகின்றது.

எட்டாங் திசைக்கும்” (4.84) என்று தொடங்கும் திரு விருத்தப் பதிகத்தில், - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/326&oldid=634342" இலிருந்து மீள்விக்கப்பட்டது