பக்கம்:நாவுக்கரசர்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. அருளிச் செயல்கள்

மூவர் அருளிய தேவாரப் பதிகங்களைத் திருமுறை களாகத் தொகுத்து அடைவுபடுத்தியவர் நம்பியாண்டார் நம்பி. இங்ஙனம் தொகுத்தபோது அப்பெருமக்கள் இவ் வுலக வாழ்வினைத் துறந்து இறைவன் திருவருளில் கலந்து வீடு பெற்ற கால அடைவினை உளத்துட் கொண்டு அமைக்கப் பெற்றது. சிவபெருமான் திருவடியில் முதலில் கலந்தவர் காழிப் பிள்ளையார். ஆகவே அவருடைய அருளிச் செயல்கள் முதல் மூன்று திருமுறைகளாக அடைவுபடுத்தப் பெற்றன. பிள்ளையாருக்கு அடுத்து இறைவன் திருவடி நிழலை அடைந்தவர் நாவுக்கரசர். ஆகவே இவருடைய அருளிச் செயல்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறை களாக அமைக்கப் பெற்றன. இவ்விருவர்க்கும் காலத்தாற் பிற்பட்ட நம்பியாரூரரின் திருப்பதிகங்கள் ஏழாந்திருமுறை யாக அமைக்கப் பெற்றன.

நாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்களில் பண்ணமைந்த பதிகங்கள் அனைத்தும் (113) நான்காம் திருமுறையிலும், திருகுறுந்தொகைப் பதிகங்கள் அனைத்தும் (100) ஐந்தாம் திருமுறையிலும், திருத்தாண்டகப் பதிகங்கள் அனைத்தும் (99) ஆறாம் திருமுறையிலும் அடங்குவனவாயின.

இறைவனது திருவருட் பெருமையினை உலக மக்கள் உணர்ந்து போற்றும்படி வியப்புடைய அருட் செயல்கள்

நா-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/332&oldid=634350" இலிருந்து மீள்விக்கப்பட்டது