பக்கம்:நாவுக்கரசர்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 301

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் (5.50:8)

என்ற திருக்குறுந்தொகைப் பகுதி காழிப் பிள்ளையாரைப் பற்றியது.

(6) சொல்வேந்தர் தாம் அருளிய திருப்பதிகப் பாடல்களில் பொருள் விளக்கத்திற்காக உவமை, உருவகம் முதலிய அணிகளைச் சிறப்பாகக் கையாள்வர். மூன்று காட்டுகள் தருவேன். s:

முதலாவது : ஐம்பொறிகளும் உயிரைச்சூழ்ந்து நின்று தத்தம் பொருள்கள்மேல் செலுத்துவதனால் உயிர் அவற் றால் ஈர்க்கப்பட்டு அலைகின்றது. அப் பொறிகளால் தனக்கு நேரவிருக்கும் அழிவினைச் சிந்திக்க நேரமின்றி ஐம் பொறிகளால் பெறும் இன்பத்திலேயே அழுந்திக் கிடக் கின்றது. இந்த உயிரின் நிலையை உலைப்பானை நீரில் இடப்பெற்ற ஆமையின் நிலையை உவமானமாகக் கொண்டு விளக்குகின்றார். உலைப்பானை நீர் சிறிது சூடேறி இள வெந்நீராகிய நிலையில் ஆமை அதிற் குதித்து மகிழ்ந்து ஆடுகின்றது. ஐம்பொறிகளால் ஈர்க்கப்பெற்ற ஆன்மா பின் விளைவறியாது சிறிது பொழுது மகிழும் மயக்க அவல நிலைக்கு உலையேற்றிய இளவெந்நீரில் குதித்தாடும் ஆமையின் தெளிவற்ற மகிழ்ச்சியினை உவமையாகக் குறித்த நயம் உணர்ந்து மகிழத் தக்கது. (4.79:10) - -

இரண்டாவது : சிறியதோர் குடிசையினை அமைப்பதில் முதலில் கால்களை நடுகின்றோம்; இரு பக்கமும் பக்க வாரைகளாகிய கைகளை ஏற்றுகின்றோம். அவற்றின்மீது சார்த்துக் கழிகளை வரிந்து கட்டி அவற்றின்மீது ஒலை முதலியவற்றை வேய்கின்றோம். ஓரங்களில் மண்ணைக் குழைத்துச் சுவரெடுக்கின்றோம். இந்தச் சுவர்களின் முன் பக்கத்தில் நுழைவாயிலும் பின்பக்கத்தில் புழைக்கடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/344&oldid=634363" இலிருந்து மீள்விக்கப்பட்டது