பக்கம்:நாவுக்கரசர்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 303

- என வரும் திருநேரிசையில் உருவகமாக விரித்துக் கூறிய

முறை நம் உள்ளத்தை ஈர்ப்பதாகும்.

(7) இறைவன் இயல்பைப் பல இடங்களில் விளக்கி யுள்ளார். இறைவனின் இயல்பை சொரூப நிலை, தடத்த நிலை என்று பிரித்துப் பேசும் சைவ சித்தாந்தம். ஐந்து தொழில்களைப் புரியும்போது-தடத்த நிலையில்.இறைவன் அவற்றிற்கேற்ப வடிவும் பெயரும் கொண்டு வரையறைப் பட்டுப் பலவாகி நிற்பான். அத்தொழில்களைப் புரியாமல் அவன் வாளா இருக்கும்போது.சொரூப நிலை-வடிவு பெயர் முதலியன ஒன்றும் இன்றி எல்லையற்ற பொருளாக நிற். பான். r . . . .

சொரூப நிலையில் உள்ள இறைவன் உயிர்களால் அறியப்படுபவன் அல்லன்; அறியப்படாதவனும் அல்லன். *உயிர்களால் அறியப்படாதவன் இறைவன்’ என்பதற்கு ஏனைய பசு, பாசங்களை அறியும் முறையில் அறியப் படாதவன்” என்பது பொருள். அறியப்படுபவன்’ என்ப தற்கு வேறு முறையில் அறியப்படுபவன்’ என்பது பொருள். அதாவது, அவனைப் பாச, பசு, ஞானங்களால் அறிய முடி யாது. இக்கருத்தினை,

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

மயான்த்தான் வார்சடையான் என்னின் அல்லான்; ஒப்புடையன் அல்லன்; ஒருவன் அல்லன்;

ஓர் ஊரன் அல்லன், ஓர் உவமன் இல்லி, அப்படியும் அங்கிறமும் அவ்வண்ணமும்

அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இக்கிறத்த இவ்வண் ணத்தன்

இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொ னாதே.

- (6.97:10) என்ற தாண்டகத்தில் காட்டுவர். இந்த நிலையைப் பதி ஞானத்தால்தான் அறிய முடியும். இங்குக் காட்டப்பட்ட தாண்டகம் இறைவனின் சொரூப நிலையை விளக்குவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/346&oldid=634365" இலிருந்து மீள்விக்கப்பட்டது