பக்கம்:நாவுக்கரசர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சமண் சமயம் புகுதல்

ASA SSASASMMAAA AAAAA


உளவியலார் குழந்தையின் வளர்ச்சிப் பருவங்களைக் குழவிப் பருவம் (0-3 வயது), முன்பிள்ளைப் பருவம் (3-6 அல்லது 7), நிலைமாறு பருவம் (6 அல்லது 7-8), பிள்ளைப் பருவம் (8-12), குமரப் பருவம் (12-18) என்று பிரித்து ஒவ்வொரு பருவத்திலும் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, இவற்றைப்பற்றி விரிவாக விளக்கி யுள்ளனர். குமரப் பருவத்தில் விரைவான உடல்வளர்ச்சி இருக்கும்; மன வளர்ச்சியிலும் தொடர்ந்து வேகம் இருக்கும். பகுத்தறிவு விரைவாக வளர்வதைக் காண்லாம். சமூகமனப்பான்மையும் புத்துயிர் பெறுகின்றது. இளை ஞனின் வாழ்க்கையில் குடும்பச் சூழ்நிலை கணிசமான அளவுக்குப் பெரும் பங்கு பெறுகின்றது. எல்லாம், வெளியுலகில் அதிகமாகப் பழகும் வாய்ப்பு இருப்பதால் புறச் சூழ்நிலையால் பெருமாற்றம் ஏற்படுவதற்குக் காரணம் உண்டு. கீ ழ் ப் படியா ைம, தன்னை முக்கியமாக நினைத்தல், பிறர் தன்னைப் பாராட்ட விரும்புதல், மடிமை, ஊக்கமின்மை ஆகியவையும் இப் பருவத்தில் காணப்பெறுபவை. குடும்பம், பள்ளி இவற்றை விடப் பரந்த சமூகம் ஒன்றின் உறுப்பினர் என்ற உணர்வு இப் பருவத்தினரிடம் எழுகின்றது. புதிய ஊக்கங்களும், உறவுகளும், நோக்கங்களும் ஏற்படுகின்றன. சமூகத்தை நாடுதல், தம்மையொத்த வயதினருடன் சேர விரும்புதல், கழகம் அமைத்தல், சமூகத்திற்காகத் தன்னை ஒடுக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/54&oldid=634405" இலிருந்து மீள்விக்கப்பட்டது