பக்கம்:நாவுக்கரசர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமண் சமயம் புகுதல் 13

நல்குகின்றார். இங்ஙனம் உலகத்துள்ளார் யாவருக்கும் இல்லையென்னாது ஈந்து மகிழும் அருளாளராய்த் திகழ்கின்றார்.

சமய மாற்றம்: மருள்நீக்கியார் வாழ்ந்த காலத்தில் சமணத் துறவிகள் பலர் தமிழகத்தில் சமண் சமயத்தைப் பரப்ப வேண்டும் என்னும் பெருவிருப்பால் பாடலிபுத்திரம் முதலிய ஊர்களில் சமண் பள்ளிகளும், பாழிகளும் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தாம்கற்றுத் துறை போய அளவை நூல் (தருக்கம்) வன்மை யாலும் சீவகாருண்யத்தைப் போற்றியுரைக்கும் அறிவுரை களாலும் தமது சமயத்தைத் தமிழ்நாடெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்தம் கொள்கைகளால் ஈர்க்கப்படுகின்றார் மருள்நீக்கியார். எல்லாச் சமயங் களுள்ளும் சிறப்புடைய மெய்ச்சமயம் இதுவெனத் தெரிந்துணரும் ஆர்வம் இவரிடம் தலைதுாக்கி நிற்கின்றது. சிவபெருமான் திருவருளும் இவருக்குக் கைகூடப் பெற வில்லை. கொல்லாமை என்னும் நல்லறப் போர்வையில் மறைந்துலவும் சமண் சமயத்தில் சேரக் கருதுகின்றார். பாடலிபுத்திரம் என்னும் ஊரையடைந்து சமண முனி வர்கள் வாழும் தவப் பள்ளிகளை நண்ணுகின்றார். பேரின்பமாகிய வீடுபேற்றினை அளிக்கவல்ல உண்மைக் சமயம் எங்கள் சமண் சமயமே என மருள்நீக்கியாருக்கு எடுத்துரைத்து அவரைத் தம் சமயத்தில் ஈடுபடுத்த முயல் கின்றனர் முனிவர்கள். அவர்தம் அறவுரையில் உள்ளத்தைப் பறிகொடுத்த மருள்நீக்கியார் சமண் சமயத்தைத் தழுவி அச்சமயத்தின் அரிய பல நூல்களை யெல்லாம் கற்றுத் துறைபோய வித்தகராகின்றார். இவர் தம் திறமையைக் கண்டு மகிழ்ந்த சமண முனிவர்கள் இவரைத் தருமசேனர் என்ற சிறப்புப்பெயரால் பாராட்டிப் போற்றுகின்றனர். தருமசேனரும் புத்தரில் ஒரு சாரா

3. ]. !: திருநாவுக் - 36.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/56&oldid=634407" இலிருந்து மீள்விக்கப்பட்டது