பக்கம்:நாவுக்கரசர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமண் சமயம் புகுதல் 5

அமணர்களை ஆதரித்து அவ்ர் ப்ொருட்டுப் பெரும் பொருளையும் காலத்தையும் கொன்ன்ே செலவிட்ட தன்மையினையும் குண்டர் குழுவினின்றும் தம்மைப் பிரித்து ஆட்கொண்ட பேரருளாளன் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் என்பதனையும் சில பாடல்களில் குறிப்பிடு கின்றார்.

குண்டாக்க ணாயுழன்று கையி லுண்டு

குவிமுலையார் தம்முன்னே காண மின்றி உண்டியுகந்து அமனே கின்றார் சொற்கேட்டு

உடனாகி யுழிதந்தேன் (6.3:7)

எனவும்,

பல்லுரைச் சமண ரோடே

பலபல கால மெல்லாம்

சொல்லிய செலவு செய்தேன் (4.39:7)

எனவும்,

துறவியென் றவம தோரேன்

சொல்லிய செலவு செய்து

உறவினால் அமண ரோடும்

உணர்விலேன் (4.39:6)

எனவும்,

குண்ட ரோடு பிரித்தெனை

யாட்கொண்டார் போலும் (6.54:8)

எனவும்,

குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்

மிண்டரோடு படுத்துய்யப் போந்து (5.41:6)

எனவும் வரும் பாடற் பகுதிகளால் இவற்றைத் தெளிய லாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/58&oldid=634409" இலிருந்து மீள்விக்கப்பட்டது