பக்கம்:நாவுக்கரசர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூலைநோயால் தடுத்தாட்கொள்ளப்பெறுதல் 35

பத்தனாய்ப் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்

பாமாலை பாடப் பயில்வித் தானை என்ற திருமுதுகுன்றத் தாண்டகத் தொடராலும் ( 08:) அறிந்து தெளியலாம்.

மேலும் கூற்றாயினவாறு (4:1) என்ற முதற் குறிப் பினையுடைய செந்தமிழ்ப் பாமாலை தீராத வயிற்று நோயாகிய சூலை நோயால் வருந்திய நிலையில் பாடப் பெற்றதென்பதை, இப்பதிகத்தில் வரும்,

சுடுகின்றது. சூலை தவிர்த்தருளிர் (3) உடலுள்உறு சூலை தவிர்த்தருளாய் (6) வலிக்கின்றது. சூலை தவிர்த்தருளிர் (7) என்ற வேண்டுகோள் தொடர்களால் தெளிவாக அறிய லாம். தம்மை வருத்திய கடும்பிணியாகிய சூலை நோயினை இறைவன் விரைவிற் போக்கியருளிய அற்புத நிகழ்ச்சிக்கு

சூலைதீர்த் தடியேனை ஆட்கொண்டாரே (3) உடலுறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே (6) இடருறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே (11) என்ற திருப்பதிகத் (6.96) திருப்பாடல்களின் தொடர்கள் அகச் சான்றுகளாக அமைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/68&oldid=634420" இலிருந்து மீள்விக்கப்பட்டது