பக்கம்:நாவுக்கரசர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 த்ாவுக்கரசர்

மன உறுதியுடையவராய் அமைச்சர்களுடன் செல்லு கின்றார். அமைச்சர்கள் தாம் திருநாவுக்கரசரை அழைத்து வந்த செய்தியைப் பல்லவ வேந்தனுக்குத் தெரிவிக்க, அவனும் தன் அருகிலுள்ள சமணர்களை நோக்கி, இவனுக் குரிய தண்டனை யாது?’ என வினவுகின்றான். இது சமயம் சமணர்கள் இவரை நீற்றறையிலிடுதலே தக்கது: எனப் பரிந்துரைக்கின்றனர். -

மதிகெட்ட மன்னன் இப் பரிந்துரையை ஏற்று ஏவலாளர்களை நோக்கி, இக் கொடியவனை நீற்றறை யிலிடுங்கள்’ எனப் பணிக்கின்றான். அவர்களும் நாவுக் கரசரை வெம்மைமிக்க நீற்றறையிலிட்டுத் தாளிட்டுப் பூட்டுகின்றனர். நீற்றறையினுள் புக்க நாவுக்கரசர் ஈண்டு வரும் துயருளவோ, ஈசன் அடியார்க்கு?’ என்று சிவ பெருமானைத் தம் மனத்திலிருத்தித் தியானித்து வழிபட்டு இருக்கின்றார். ஆனால் வெம்மை மிக்க அந் நீற்றறை நாவுக்கரசருக்கு இளவேனிற் காலத்துத் தென்றல் போலவும், தண்கழுநீர்த் தடம் போலவும், யாழொலியின் இனிமையுடையது போலவும், இறைவன் திருவடி நீழ லாகிய அருளின் நீர்மையுடையது போலவும் பேரின்பம் தருவதாய் அமைந்து விடுகின்றது. இதனைச் சேக்கிழார் பெருமான்,

வெய்யற்ே றறையதுதான்

வீங்கிளவே னிற்பருவம் தைவருதண் தென்றல் அணை

தண்கழுநீர்த் தடம்போன்று மொய்யொளிவெண் ணிலவலர்ந்து முரன்றயாழ் ஒலியினதாய் ஐயர்திரு வடிநீழல் -

அருளாகிக் குளிர்ந்ததே. என்று நயம்படக் காட்டுவர். மேலும்,

2. பெ. பு: திருநாவுக்கரசு.98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/73&oldid=634426" இலிருந்து மீள்விக்கப்பட்டது