பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் டாக்டர், அன்று, ரகுநாதன் ஆஸ்பத்திரியில் பூர்ணகுணமடைந்து விட்டதனால் வீட்டிற்குப் போகலாமென்று அனுமதித்துவிட்டார். மாலை நான்கு மணிக்கு அவர் ஆஸ்பத்திரியை விட்டுக் கிளம்பலாம் என்று ஏற்பாடு மனைவியும் பையன் மணியும் உறையூரில் அவருடைய வேட்டகத்திலேயே இருந்ததனால் ஆஸ்பத்திரியிலிருந்து நேரே உறையூருக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று அவர் கருதியிருந்தார். நரசிம்மன் மூன்றரை மணிக்கே ஆஸ்பத்திரிக்குத் தம்முடைய காருடன் வருவதாகச் சொல்லி அனுப்பியிருந்ததனால் காரை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ரகுநாதன். ஆஸ்பத்திரி வராந்தாவில் டாக்டரும் அவரும் நாற்காலியில் அமர்ந்து பேசியவாறே, நரசிம்மனின் காரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 'மணி நான்கும் ஆகிவிட்டது. இன்னும் நரசிம்மனின் காரைக் காணவில்லையே?’ என்று நினைத்துக் கொண்டிருந்தார் ரகுநாதன். அதேசமயத்தில் ஆஸ்பத்திரி கேட்டிற்குள் நுழைந்தது ஒரு கார். டாக்டர், ரகுநாதன் இருவருமே எதிர்பாராத விதமாக மோகனரங்கம் கல்லூரி பிரின்ஸிபாலும், காரியதரிசியும் அந்தக் காரியிலிருந்து இறங்கினர். டாக்டரும் ரகுநாதனும் எழுந்து அவர்களை வரவேற்றனர். பரஸ்பரம் குசலப்பிரச்னம் எல்லாம் நடந்தன. “ஸார் பையன்களும் ஆசிரியர்களும் சேர்ந்து உங்கள் உடல் செளக்கியமுற்றதைப் பாராட்டும் நோக்கத்தோடு காலேஜில் ஒரு விழா ஏற்பாடு செய்திருக்கின்றோம்.” பிரின்ஸிபால் குழைந்த சொற்களால் வேண்டினார். . “எனக்கு இப்போது உறையூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறதே ஸார்! மேலும் இன்னொரு விஷயம். உங்களிடமும் காரியதரிசி அவர்களிடமும் இப்போதே சொல்லிவிடுகிறேனே! எனக்கு இனிமேல் காலேஜில் வேலை பார்க்கவே ஆசையில்லை ஸார். அங்கே வரவேண்டும் என்றாலே மனம் கசக்கின்ற மாதிரி தோன்றுகிறது! தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள்!” பிரின்ஸிபாலும் காரியதரிசியும் திடுக்கிட்டனர். ரகுநாதனின் மறுமொழி அவர்களைப் பிரமிக்கச் செய்தது. “ஸார் கூட்டத்திற்குக் கலெக்டர் நரசிம்மன் தலைமை வகிக்க இசைந்துள்ளார். ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். மற்ற விஷயங்களைப் பின்பு பேசிக் கொள்வோம். பையன்களும் நாங்களும் ஆர்வத்தோடு செய்திருக்கும் இந்த ஏற்பாட்டைத் தாங்கள் கட்டாயம் ஏற்றுக் கொண்டு வர வேண்டும்.” “நரசிம்மனா?” ரகுநாதன் வியப்புடனே கேட்டார். "ஆமாம்! புதிதாக வந்திருக்கிறாரே கலெக்டர், அவர் உங்கள் நண்பர் என்று கேள்விப்பட்டு, ஏற்பாடு செய்தோம் லார்” வேண்டா வெறுப்பாக அவர்களுடனே புறப்பட்டார்.ரகுநாதன்.பிரின்ஸ்பாலின் வேண்டுகோளுக்கிணங்கி டாக்டரும் புறப்பட்டார். காலேஜ் வாசலில் காரை விட்டு இறங்கிய ரகுநாதன் திகைத்துப் போனார்.திருச்சி நகரத்து இளைஞர் உலகமே அங்கே ஒன்று கூடியிருந்தது. அவரிடம் படித்த