பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



டார்ச் விளக்கின் உதவி கொண்டு ரிப்பேர் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டான். நான் கீழே உட்கார்ந்துகொண்டே அவனுக்கு ரிப்பேரில் ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன்.

குழந்தையின் அழுகை ஒலி கேட்கவில்லை. அழுது அழுது அவள் தோளில் சாய்ந்தபடி தூங்கிவிட்டது போலிருக்கிறது.

கால்மணி நேரம் வெகு மும்முரமாக ரிப்பேர் வேலையில் ஈடுபட்டிருந்தோம். கீழேயிருந்து எழுந்து தலை நிமிர்ந்தேன். அப்போது அவள் நின்று கொண்டிருந்த இடம் சூனியமாக இருந்தது. ‘சரிதான்! எங்கோ புறப்பட்டுப் போய்விட்டாள் போலிருக்கிறது. சனி விட்டது; நிம்மதியாக ஊருக்குப் போகலாம்’ என்று எண்ணி மனத்தைத் திருப்திப்படுத்திக்கொள்ள முயன்றேன் நான்.

டிரைவர் வண்டிக்கு அடியிலிருந்து டார்ச் லைட்டும் கையுமாக எழுந்திருந்தான். “நீ வண்டியைக் கிளப்புகிற வழியைப் பாரு” என்று அவனிடம் கூறிவிட்டு, சாயந்துகொள்ள வசதியாக இருக்குமே என்று பின் ஸீட்டுப்பக்கம் போனேன். ஸீட்டில் ஏறுவதற்குக் காலை எடுத்து வைத்தவன் பதறிப் போய்க் கீழே இறங்கினேன்.

“அந்த டார்ச்சை இப்படிக் கொடு” என்று கேட்டு வாங்கிய நான் பின் ஸீட்டில் ‘டார்ச்’ ஒளியைப் பரவவிட்டேன். அங்கே வெள்ளிைத் துணியில் போர்த்தி முகம் மட்டும் தெரியும் படியாக அந்தக் குழந்தை விடப்பட்டிருந்தது.குழந்தை நிம்மதியாகத் துங்கிக் கொண்டிருந்தது.

“அடாடா! குழந்தையை நம் தலையிலே கட்டிவிட்டுப் போய்விட்டாள் போலிருக்கே?”

“தலை எழுத்து அப்பா! தலையெழுத்து. இன்றைக்கு திருமூர்த்தி மலைக்குப் புறப்பட்டு வந்ததை ஏழேழு ஜன்மத்துக்கும் மறக்கமாட்டேன்."

டார்ச் ஒளியில் அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தேன். மலர்ந்து விகசித்த தாமரைப் புஷ்பம்போல் தங்க நிறத்தில் அந்தப் பச்சிளம் சிசு நிர்மலமானதாகக் காட்சியளித்தது. துணியை இலேசாக விலக்கிப்பார்த்தேன். அது பெண் குழந்தை ஒரு வயதுக்கு மேலிருக்கும். குழந்தை என்றால் வெறும் குழந்தையா? அந்த மாதிரி அழகு நிறைந்த குழந்தையை ஆயிரத்தில் ஒன்று, பத்தாயிரத்தில் ஒன்றாகத்தான் காண முடியும்.

குழந்தையை மறுபடியும் போர்த்திவிட்டேன். அது தூக்கத்தில் புரண்டு படுத்தது. சிரிப்புக் கொஞ்சும் அந்தப் பிஞ்சு இதழ்கள் எந்தக் கல் மனத்தையும் இளக்கிவிடும்.

“டிரைவர் உட்காரு... கொஞ்ச நேரம் காத்திருந்து பார்ப்போம். வரவில்லையானால் பின்பு குழந்தையையும் கொண்டு போக வேண்டியதுதான்.”

நேரம் கடந்து கொண்டே இருந்தது. மணி பத்தேகால் இரண்டு பேருக்கும் பசி வயிற்றைக்கிள்ளியது. "இனிமேல் பார்ப்பதில் பயனில்லை.புறப்படவேண்டியதுதான். அவசியமானால் ஊருக்குப் போய் குழந்தையைப் புகைப்படம் பிடித்துப்