பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



99. நான் ஒரு அரிஸ்டாக்ரட்

‘நான் யார்’ என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படலாம். நான் யார் என்கிறதைப் பற்றி உங்களுக்கு ரொம்பச் சொல்ல வேண்டியதில்லை. எங்க பூர்வோதரம் ரொம்ப ரொம்ப சிரேஷ்டமானது. 'கரிமங்கலம் ஃபேமிலி'யைத் தெரியாதவா மெட்ராஸிலே மட்டுமென்ன டெல்லியிலே கூட இருக்க முடியாது. கரிமங்கலம் கணபதி சாஸ்திரிகள் குமாரர் சம்பு சாஸ்திரி - ஹைகோர்ட் நீதிபதியாயிருந்து ‘ரிடயர்ட்' ஆனதை யார்தான் மறந்திருக்க முடியும்?

அந்த சம்பு சாஸ்திரியின் திருக்குமாரன்தான் நான். என் சிற்றப்பன் ஓர் ஐ.எபி.எஸ். என்னுடைய மாமாக்கள் எல்லாம் அட்வகேட்டுகளும், டாக்டர்களுமாக மாதம் இரண்டாயிரத்துக்கு மேல் மூவாயிரத்துக்குக் குறையாமல் சம்பாதிக்கிறாளாக்கும்.. எங்க தாத்தா கணபதி சாஸ்திரிகள் இருந்தாரே, அவர் வேதங்களையும், சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவராம். இந்த மைலாப்பூரிலே கரிமங்கலம் கணபதி சாஸ்திரிகளைப் பற்றிச் சொல்லிப் பெருமைப்படாத ஆஸ்திகாள் எங்குமே கிடையாது. எங்க தாத்தா கணபதி சாஸ்திரிகள் செய்திருக்கிற தர்மங்களுக்குக் கணக்கு வழக்கே இல்லையாம். தாத்தா செய்திருக்கிற தருமங்களுக்காக எங்க அப்பாவுக்குத் 'தர்ம சிந்தாமணி’ என்று போன மாதம் ஏதோ ஒரு விழாவிலே யாரோ பெரிய மனிதர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கெளவரப் பட்டம் வழங்கியிருக்கா. யாராவது பள்ளிக்கூடத்து விழாவிலே, பேசறதுக்கோ, பரிசு வழங்கறதுக்கோ எங்க ஃபாதரை ‘இன்வைட்' பண்றதுக்கு வந்தான்னு வச்சுக்குங்கோ - அப்போ எங்க ஃபாதர் அந்த 'இன்விடேஷன்'லே தர்ம சிந்தாமணி ஆஸ்தீக ரத்தினம்-சம்பு சாஸ்திரிகள் -ரிடயர்ட் ஹைகோர்ட் நீதிபதி-ன்னு இவ்வளவு பட்டமும் போடணும்கிறதிலே ரொம்ப ரொம்பப் பர்டிகுலரா இருப்பார். எங்க ஃபாதருக்கு சங்கீதத்திலே அபார டேஸ்ட் உண்டு. சங்கீத அகாடெமியிலே கூட வைஸ் பிரஸிடெண்டாவோ என்னவோ இருக்கார். சங்கராச்சாரிய சுவாமிகள்னா எங்க ஃபாதர் உயிரை விட்டுடுவார் போங்க! அத்தனை பக்தி அவருக்கு. இப்படிப்பட்டவருக்கு பிள்ளையாப் பிறந்த நான் பெருமைப்படறதுக்கு எவ்வளவோ நியாயமிருக்கு. ஆனாலும் என்னாலே பெருமைப்பட முடியலே. என்ன காரணங்கிறேளா? காரணம் எத்தனையோ இருக்கு. ஒண்ணு ரெண்டை மட்டும் இங்கே சொல்றேன். எங்க அம்மா... இருக்காளே... ஒரு மாதிரி, அப்' மட்டும் என்ன?... அவரும் ஒரு மாதிரித்தான்..;ஒரு மாதிரின்னா' என்ன அர்த்தம்? 'அவா ரெண்டு பேரும் எதிலே ஒரு மாதிரின்னு நீங்கள் கேட்பேள்!' ஆனால் உங்க கேள்விக்குப் பதில் சொல்ல நேக்குத் தெரியாது. 'அம்பீ'ன்னுகொஞ்சம் உரத்துக் கூப்டுட்டேள்னாலே நா. அழுதுப்பிடுவேன். நா அத்தனை பயந்தாங்கொள்ளி போங்கோ. ஒரு மாதிரின்னா-ஒரு மாதிரின்னுதான் நேக்குச்சொல்லத் தெரியும். நான்