634 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் சாதாரணமாக ஏழாயிரம் எட்டாயிரம் என்ற தொகைக்கு மேல் அந்தத் தோப்பு குத்தகை போனது இல்லை. அந்த வருடத்தில் பத்து, பன்னிரண்டாயிரம் வரைகூடக் குத்தகைக்காரர்கள் கேட்டார்கள். குத்தகைக்காரரிடம் ஒப்புவிக்கிற ஒரு பூ,பிஞ்சுகூடக் களவு போய் விடக்கூடாது என்று அக்கறையாகக் காவலுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிள்ளை. ஒன்றுக்கு நாலு பேராகக் காவற்காரர்களை நியமித்திருந்தார் அவர் நாலு காவற்காரரும் இராப்பகலாகக் காத்து வந்தனர். அப்படி இருக்கும்போது தான் பயங்கரமான அந்தத் திருட்டு நிகழ்ந்துவிட்டது. நெல்லையப்பப் பிள்ளை கூறியபடியே அதை நான் எழுதுகிறேன். "சார்! நேற்று அமாவாசை நான் ஒரு காரியமாகக் கடையநல்லூர் போய்விட்டு இன்று மத்தியானம்தான் திரும்பினேன். நேற்று இரவு இவ்வளவு பயங்கரமான முறையில், என் தோப்பில் கொள்ளை போகும் என்று நான் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, ஸார் இதுவரை இந்த மாதிரி களவு போனதில்லை. “எங்கள் தோப்புக்கு நாலுபுறமும் வாசல் உண்டு. வாசல் என்றால் வேறொன்றுமில்லை.மூங்கில் பிளாச்சுகளால் செய்யப்பட்ட சாதாரண அடைப்பான் கதவுதான்.காய்ப்புக் காலத்திலே நாலு பக்கத்து வாசலிலேயும் காவலாட்கள் இருப்பது வழக்கம். அதே போல் நேற்று அமாவாசை இரவும் ஆட்கள் காவலுக்குப் படுத்திருந்திருக்கிறார்கள்.இன்று காலையில் போய்ப் பார்த்தபோது வடக்கு,மேற்கு,தெற்கு ஆகிய மூன்று திசையிலும் காவல் இருந்த ஆட்கள் இரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தார்களாம். கிழக்குப் பக்கம் காவல் காத்துக் கெண்டிருந்த ஆள் இருபது இருபத்தைந்து கெஜதூரம் ஓடிவந்து மயங்கிக்கிடந்தானாம்.சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள நல்ல ஜாதி மாங்காய்களும் பலாப்பழங்களும் தோப்பிலிருந்து களவாடப் பட்டிருக்கின்றன. உயிரோடு பிழைத்த கிழக்குப்புறத்துக் காவலனை மயக்கம் தெளிவித்துக் கேட்டுப் பார்த்தால் அவன் கூறுவதை யாரும் நம்ப முடியவில்லை. நள்ளிரவில் பூதாகாரமான ஒரு ஆள் சிவபெருமான்மாதிரிக் கழுத்தில் பாம்பு படம் விரித்தாடக் கையில் நெருப்பு ஏந்திப் பயங்கரமாகக் குதித்துக் கொண்டு ஒடி வந்தானாம். கையில் நெருப்பு, கழுத்தில் நல்ல பாம்புமாகப் பூதம் மாதிரி இருந்த அந்த உருவம் தன்னைத் துரத்தியதாகவும் தான் கொஞ்ச தூரம் ஒடி மயங்கி விழுந்து விட்டதாகவும் அவன் கூறினான். எனக்கு நம்பிக்கை இல்லை.” கூறி முடிப்பதற்குள் நெல்லையப்பப் பிள்ளைக்கு முகத்தில் முத்துமுத்தாக வியர்வை அரும்பிவிட்டது. கூறும்போது நடுநடுவே அவருக்கே வாய் குழறியது. "ஏன் பிள்ளைவாள்? இரத்தம் கக்கிச் செத்துப் போனதாகச் சொன்னீர்களே, மூன்று காவற்காரர்கள், அவர்கள் பிரேதங்களை என்ன செய்தீர்கள்?” 'லோகல் பண்டு ஆஸ்பத்திரியிலே பரிசோதனைக்கு அனுப்பித்திருக்கிறேன். டாக்டர் உங்களையும் வைத்துக் கொண்டுதான் பரிசோதிக்க வேண்டும் என்கிறார்.” “அது சரி உயிர் தப்பிய காவற்காரன் உங்கள் வசம் பாதுகாப்பில்தானே இருக்கிறான்? ஆளை வேறெங்கும் விட்டுவிட வில்லையே?”
பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/12
Appearance