பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100. வாத்தியங்கள்

விடுதியின் எதிரே புல் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வார்டன் சாவித்திரி. பூமி சிரிப்பது போல் எத்தனை அழகான புல்வெளி. எழிலார்ந்த மலைச் சரிவிலே அந்தக் கல்லூரி அமைந்திருந்தது. பெண்களுக்கான அந்தக் கல்லூரியின் விடுதிகளும் மலைச் சரிவிலேயே அமைந்திருந்தன. சாவித்திரிதான் அந்தக் கல்லூரி விடுதிகளில் பெரியதும் சுமார் முந்நூறுக்கு மேற்பட்ட வயது வந்த மாணவிகள் தங்கிப் படிப்பதுமான கஸ்தூரிபா விடுதி - என்ற பெரிய ‘பிளாக்’கிற்கு வார்டனாக நியமிக்கப்பட்டிருந்தாள். இதற்கு முன்னால் அந்த விடுதிக்கு வார்டனாக இருந்தவர்கள் எல்லாருமே நாற்பது வயதுக்கு மேற்பட்ட பேராசிரியைகள்தாம். முதன்முதலாக இந்த ஆண்டுதான் திருமணமாகாதவளும் - இளம் வயதினளும், அநுபவம் குறைந்தவளுமான சாவித்திரியைப் போன்ற ஒரு இளம் விரிவுரையாளருக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் கல்லூரி முதல்வி இந்தப் பொறுப்பை ஒப்படைத்து ஆர்டர் போடு முன் சாவித்திரிக்கு ஒரு பெரிய உபதேச விரிவுரையே ஆற்றியிருந்தாள்.

“இதோ பார்! மிஸ் சாவித்திரி உன்னிடம் மிகவும் நம்பிக்கையோடு இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறேன். ரிஸர்வ்ட் ஆகவும் கடுமையாகவும் இருக்க வேண்டும். படிக்கிற பெண்களுக்கும், உனக்கும் வயதிலோ தோற்றத்திலோ அதிக வித்தியாசமில்லை. கலகலவென்று நெருங்கிப் பழகினியோ உன்னையும் ஸ்டுடண்ட் மாதிரி ஆக்கி மட்னி ஷோவுக்கு இழுத்துக் கொண்டு போய் விடுவார்கள். ஜாக்கிரதை” - என்று பிரின்சிபால் அம்மாள் கடுமையாக வற்புறுத்தி இருந்தாள்.

புல் வெளியில் சாயங்கால வேளையில் தனியாக உட்கார்ந்திருந்த போது அந்தத் தனிமையே மனத்தில் ஒரு வேதனையாக உறுத்த, அதற்குக் காரணமான பிரின்சிபால் அம்மாளின் உபதேசமும் நினைவிற்கு வந்தது. வர வரத் தான் செயற்கையாக நாட்களைக் கடத்துவது போல் சாவித்திரிக்கு ஓருணர்வு வந்து கொண்டிருந்தது. கலீர்கலீரென்று வாத்தியங்கள் போல் சிரிக்கும் இளம் மாணவிகளோடு நெருங்கிப் பழகத் தவித்தாள் அவள்.

விடுதியின் பிரதான நுழைவாசலை ஒட்டி வார்டனின் அறை. பிரின்ஸ்பால் அம்மாளின் உத்தரவுப்படி, தான் வார்டனாகப் பதவி பெற்ற முதல் தினம் சாவித்திரி செய்த முதல் காரியம் “உத்தரவின்றி யாரும் உள்ளே நுழையக்கூடாது” - என்ற போர்டுதான். அதையும் மீறி யாராவது மாணவி அநுமதி பெற்று உள்ளே நுழைந்து விட்டாலோ வார்டன் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு மேலே, “குறையப் பேசி நிறைய உணர்த்து” “அநாவசியமாகச் சிரிக்காதே’ “சிரிப்பு என்பது பெண்மையின் விலை