பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / அரண்டவன் கண்கள் : 655 மூக்கைக் கொஞ்சம் பேர்த்து விட்டுப் பக்கத்தில் விழுந்து கிடந்தது. காற்று ஹோ,வென்று அடித்துக் கொண்டிருந்தது. பிலாவடி ஒரு உண்மைத் துணிச்சல்காரனை அவன் கையால் நடந்த தவற்றைக் கொண்டே உயிரை வாங்கிவிட்ட பெருமையை அந்தக் காற்று அறிவித்தது போலும்.பலாப் பொந்திலிருந்த கோட்டான் தைரியமாக இன்னும் கிரீச் கிரீச் என்று சாவுச் சங்கீதம் பாடிக் கொண்டிருந்தது. “மணி இரண்டே முக்காலாகி விட்டது. இங்கே சாவடியில் நண்பர் கூட்டம் நிலைகொள்ளாமல் தவித்தது. பய மாட்டிக்கிட்டானோ?” செங்கப்படையன் சந்தேகத்தைத் துணிந்து வெளியிட்டான். “சே! சே! அப்படிச் சொல்லாதே அண்ணே தூக்க வெறிச்சா இருந்திருக்கும்! முனி வீட்டுக்குப் போயிருப்பான்.” முத்தையா இப்படிச் சொல்லவும், சிலர் அதை ஆமோதித்தனர். வேறு சிலர் "அண்ணாச்சி! என்ன இருந்தாலும் நாம் இனிமேல் இப்படி இருக்கிறது நியாயமில்லை. முனி வீட்டுக்கு ஆள் அனுப்பி விசாரிச்சிக்கிட்டு ஆகிறதைச் செய்யனும்” என்றனர். முனி வீட்டுக்கு ஆள் அனுப்பப்பட்டான். கடைசியில் போன ஆள் திரும்பினான்.கையை விரித்துவிட்டான். சாவடியை" வெளிச்சம் செய்துகொண்டிருந்த அந்த ஒட்டை அரிக்கேன் லாந்தரில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு வேகமாகப் பிலாவடியை நோக்கிப் புறப்பட்டது அந்தக் கோஷ்டி அவர்களிடம் பயத்தின் பரபரப்புக் காணப்பட்டது. செங்கப்படையனுக்கு வாய் அடைத்துப் போனது. பேசத் தோன்றவில்லை. முத்தையா துடிதுடித்தான். நண்பர் கூட்டம் நாலு மணிக்குப் பிலாவடியை அடைந்தது. அங்கே கண்ட காட்சி காணச் சகிக்கவில்லை. ‘பய பிள்ளையார் மூக்கை உடைச்சிட்டு மரத்திலே ஏறியிருக்கான். யட்சிணி சும்மா வந்தாலே விடமாட்டாளே, சாமியை உடைக்க வேறே செய்திருக்கான். எதிர்பார்த்ததுதானே இப்படி நடக்கும்னு? செங்கப்படையனே இவ்வாறு மனதில் நினைத்துக்கொண்டான். வெளியே சொன்னால் அப்போதிருந்த கோபத்தில் முத்தையன் அவன் கழுத்தை நெறித்திருப்பான்.முனியாண்டி காலம் முடிந்துவிட்டது. முத்தையன்தான் உண்மையாக வருந்தினவன். "ஆமாம். திருவடியா பிள்ளை இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது:”நான் கேட்டேன்."அந்த விடலைப் பசங்களில் நானும் ஒருவனையா” என்றார் பூரீமான் பிள்ளை. பூந்துறைக்காரரான பூரீமான் பிள்ளையிடம் விடைபெற்றுக்கொண்டு நான் எழுந்தேன். (1963-க்கு முன்)