பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

666 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

சின்னத்தனமா நடந்துக்கிட்டேனே?...என்னை நீங்க மன்னிப்பீங்களா?”... பேச முடியாமல் மீண்டும் கேவிக் கேவி அழுதான் அவன்.

“சரிதான் விட்டுத்தள்ளு இதெல்லாம் வயசுக்கோளாறு தம்பீ! இப்படி வயசுக்கு ஏதாச்சும் திமிர் பிடிச்சது தோணத்தான் தோணும். பொறுப்பு வந்தா எல்லாம் தானாகத் தெரியும். நம்பறதுலேதான் எல்லாம் உண்டு. நம்பாததுலே என்ன இருக்கு? ‘இருக்குன்னு’ ஒப்புக் கொள்ளத்தானே பகுத்தறிவு வேணும்? இல்லை என்று சொல்லப் பகுத்தறிவே தேவையில்லையே?” மூப்பனார் கூறிவிட்டுச் சிரித்தார்.

அந்தச் சிரிப்பு கபகப என்று எரியும் புண்பட்ட உடம்பைக் குளிரவைப்பது போலிருந்தது இராஜகோபாலுக்கு.

- (1963-க்கு முன்)