1080 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
துணுக்குகளும் பத்திரிகைகயில் 'கவர் ஸ்டோரியாகவும்' ஸ்பேஸ் ஃபில்லர்களாகவும் வெளிவந்தன.
அந்த நிலையில் மறுபடி சிலர் கட்சி மாறியதால் மந்திரி சபை கலைக்கப்பட்டுத் தேர்தல் வந்தது. ஹைபவர் கமிட்டிக்கு வேண்டியவர்களும் தேர்தலில் நின்றார்கள்
எதிர்க்கட்சிகள் “பகடர் கமிட்டி' ஊழலைப் பற்றி ஊரூராகப் பிரசாரம் செய்து அதை நியமித்த கட்சியை முறியடிக்க முயன்றனர். ஆனால், என்ன துரதிர்ஷ்டம்? பகடர் கமிட்டிக்கு வேண்டிய கட்சியே தேர்தலில் பெருவாரியாக ஜெயித்தது. அது ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் வேலையாகப் “பகடர் கமிட்டி மேல்நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷனைக் கலைத்தது.கமிட்டி மீண்டும் உயிர் பெற வழி செய்தது.
மீண்டும் ‘என்ஸைக்ளோபீடியா' ஆபீஸ் திறக்கப்பட்டது. அதன்பின் பல ஐந்தாண்டுத் திட்டங்கள் தொடர்ந்தன. பகடர் நல அபிவிருத்திக் குழுவும் தொடர்ந்தது. குழுக் கூட்டங்கள் ஏஷியா இண்டர் கான்டினென்டல் ஏ.ஸி. கான்ஃபாரன்ஸ் ஹாலிலேயே தொடர்ந்து நடந்தன. இங்கிலாந்து-அமெரிக்க விஜயங்களும் ‘என்ஸைக்ளோபீடியா சாக்கில் தொடர்ந்தன. என்ஸைக்ளோபீடியா வேலைகள் முடிவற்று நீண்டன.
அவ்வப்போது ஆண்மையை இரவல் வாங்கிப் பின் நிரந்தர நபும்ஸ்கர்களாகி விடும் பல பத்திரிகைகள் அது பற்றி அடிக்கடி எழுதவும் செய்தன. எதிர்க்கட்சிகள் சீறின. .
என்ன செய்தும் பிரயோசனமில்லை! எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோபீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை.
'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்பது போலச் செத்துப் போன பகடர் இனத்தின் பேராலே ஒரு 'ஹைபவர்கமிட்டி இன்னும் சாகாமல் பயன்பெற்று வாழ்ந்து கொண்டிருந்தது.
ஒரு விஷயத்தை யுகக் கணக்கில் செயல்படவிடாமல் இழுத்தடிக்கக் கமிட்டிகளாலேயே முடியாவிட்டால் பின் வேறு யாரால்தான் முடியப் போகிறது?
(தினமணிக் கதிர், 30.10.1981)