நா. பார்த்தசாரதி 16 1
இப்படி மனம் மாறிவிடுவாள் என்பதை இன்னும்கூட அவனால் நம்பி ஒப்புக்கொள்ள முடியாமல் இருந்தது. வெளிநாட்டுப் படிப்பிலும் பகட்டிலும் ஆசையுள்ள ஒரு பணக்காரக் குடும்பத்தின் சராசரிப் பெண்ணாகவே அவளைக் கற்பனை செய்து வைத்திருந்தான் அவன். அதனால்தான் அவளது மன மாற்றம் அவனைத் திகைக்கச் செய்திருந்தது.
சிவகாமிநாதனின் வீடு என்பது முக்கால்வாசி அச்சகத் திற்கும், கால்வாசி மற்ற உபயோகங்களுக்குமாக இருந்த ஒரு பழைய காலத்து ஒட்டடுக்குக் கட்டிடம். நவீன வசதி கள் எதுவும் இல்லாதது. சொல்லப் போனால் அத்தியா வசியமான சில செளகரியங்கள் கூட அங்கே கிடையாது. அங்கே வருகிற விருந்தினர்கள் உபசரணைகளை அடைய முடியாது. மாறாக அங்கு நிறைந்திருக்கிற சிரமங்களைத் தான் பங்கிட்டுக்கொள்ள முடியும். :
மங்கா தன் தந்தையோடு கோபித்துக் கொண்டு தியா.இ. யின் குரல் அலுவலகத்திலேயே தங்குகிறேன் என்று. செர்ன்னபோது அதை ஏற்கவும் இயலாமல் மறுக்கவும் இயலாமல் இருந்தார் சிவகாமிநாதன்.
அங்கே வீட்டில் இருப்பவர்களுக்கே சரியான படுக்கை, விரிப்பு. தலைப்ணை என்று எதுவும் கிடையாது. அழுக் கடைந்து கிழிந்த இரண்டொரு பாய்களும், தலைக்கு உயர மாக வைத்துக் கொள்ள மரக் கட்டைகளுமே இருந்தன.
- அங்கிருந்த வசதிக் குறைவுகள் காரணமாகச் சிவகாமி நாத்னுக்கு அவளை அங்கே தங்கும்படி முகமவர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் தயக்கமாக இருந்தது. பண்பாடு, நாகரிகம் காரணமாகத் "தங்குகிறேன்' என்று கூறுகிற வளைத் தங்காதே’ என்று மறுக்கவும் முடியவில்லை. பரந்த மனமும் குறுகிய பொருளாதார வசதிகளும் உள்ள ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் ஏற்படக்கூடிய சோதனை தான் இது. . . .- : . . . . . . .