நா.பார்த்தசாரதி 169
அப்போது சின்னியைச் சிவகாமிநாதனின் வீட்டுக் குள்ளே வரச் சொல்லி மேலும் வற்புறுத்த முடியாமல் அவனோடு நடந்து போய்த் தெருக்கோடியில் நின்று பேசுவதைத் தவிர முத்துராமலிங்கத்தால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. -
பாமர இந்திய மக்கள் ஒன்று நல்லவர்களைப் பக்தி செய்து வணங்குகிறார்கள். அல்லது வெறுக்கிறார்கள். நேசிக்கவும் காப்பாற்றவும் முன் வருவதில்லை. சிவகாமி நாதனைப் போன்றவர்கள்மேல் சின்னியை ஒத்த அடித் தளத்து மக்களுக்கு மதிப்பும் பயபக்தியும் இருக்கின்றனவே ஒழிய நேசம் ஏற்படுவதில்லை என்பதை முத்துராமலிங்கம் கவனித்தான். தெருக்கோடிக்குச் சென்றவுடனே சின்னி
குரலைக் கடுமையாக்கி, -
. கடைசியிலே நான் பயந்தபடியே ஆயிடிச்சு! உன்னை
பாபுராஜ் துரத்திப்பிட்டான். கூட்டம் பேசற ஆசையிலே வேலையைப் பறிகொடுத்துப்புட்டே! நீ செய்யிறது ஒண்ணுமே நல்லா இல்லே. தொடர்ந்து ஒண்ணொண்ணா லம்புலே மாட்டிக்கிட்டு வர்ரே! நம்பளுக்கு வேண்டியு ஆளாச்சேன்னு உன் கையிலே சொல்லிட்டுப் போக வந்தேன். மந்திரி நாதனை எதிர்த்துக் கூட்டம் கீட்டம் போட்டுப் பேசாதே கலாட்டாவுக்கு. ஆள் ஸ்ெட்-அப் பண்றாங்க. ஸோடா புட்டி வீச, கல்லெறிய எல்லாத்துக்கும்
ஏற்பாடாகுது.' - - - - -
இது உனக்கு எப்படித் தெரியும் சின்னி: நம்ப பேட்டை ஆளுங்கதான் பண்ணப் போறாங்க.. கrதிலே உளுந்திச்சு...அதான் வந்தேன்."
"உங்க பேட்டை ஆளுங்களுக்கு மானமாப் பிழைக்க வேற தொழில் இல்லியா?" -
அவங்க எந்த ஸைடும்' இல்லே! யார் வந்து காசு குடுத்து யார் GDGaు ஏவினாலும் போவாங்க...அவுங்களை ஏவி விடவறவங்களுக்கே மானம் இல்லாமப் போறப்ப