名盛名 நிசப்த சங்கீதம்
இரயில் நில்ையத்திலிருந்து வீடு திரும்பியதும், முத்து, ராமலிங்கம் தானே! சிவகாமிநாதனிடம் சென்று, 'ஐயா!. உங்களிடம் தனியாக ஐந்து நிமிஷம் பேசவேண்டும்' என்று. வேண்டினான். • . -
அதற்கென்ன, தாராளமாகப் பேசலாம்' என்று: அவர் அவனோடு எழுந்திருந்து வாசல் பக்கமாக, வந்தார். . . - . . . .
"ஐயா! நானும் மங்காவும் இங்கே உங்களோட இருக் கிறதாலே உங்களுக்குப் பல சிரமங்களும், தர்ம் சங்கடங் களும் வருது. ஏதோ உங்களாலேதான் நான் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டமாதிரி நெனைச்சுகிட்டு: எங்கப்பா இங்கேயே வந்து கூப்பாடு போடறாரு, இதெல் லாம் பார்த்து எனக்கு மனசு சங்கடப்படும். கஷ்டமோ, நஷ்டமோ தயவுசெஞ்சு எங்க ரெண்டு பேரையும் தனியா இருக்க அனுமதியுங்க. குடிசையோ, ஒண்டுக்குடித்தனமோ ஏதோ ஒரு சின்ன இடமா பார்த்துக்கிட்டுப் போயிட றோம். . -
இதைக் கேட்டுவிட்டு அவன் முகத்தைக்கூர்ந்து கவனித் தார் அவர். அப்புறம் சிரித்தபடியே பதில் சொல்ல லானார். * . . . . . . - . . .
"அது நீ சொல்றமாதிரி அத்தனை சுலபமில்லே முத்து ராமலிங்கம்! மந்திரியும் எதிர்த்தரப்பு ஆட்களும் உன்னை யும் மங்காவையும் தொல்லைப்படுத்தனும்னே நாலா பக்கமும் வேட்டை நாய்களை ஏவி விடறமாதிரி அபாயங் களை ஏவி விட்டிருக்காங்க. அவங்களுக்கு இருக்கிற கோபத்திலே கொலை பண்ணக்கூடத் துணிஞ்சிருப்பாங்க இந்தச் சமயத்திலே உங்களைத் தனியா இருங்கன் னு அனுப்ப நான் சம்மதிச்சேன்னா என்னைப் போலப்பொறுப் பில்லாதவன் வேறொருத்தன் இருக்க முடியாது.உன்னாலே எனக்குக் கஷ்டம் வரும்னா அதுவே எனக்குச் சந்தோஷம்னு ஏத்துக்க நான் தயார்: உங்களுக்கு சுகமும் செளக்கியமும் வரப்போ வேனுமானா நீங்க தனியர்ப்போய்க்குங்க. கஷ்ட