உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நிசப்த சங்கீதம்

இருந்தன. இரத்தமும் சதையுமாக இயங்கும் ஹ்யூமன் கம்ப்யூட்டர்களாக மனிதர்கள் இயங்கிக் கொண்டிருந் தார்கள் போல் தோன்றியது.

- அந்த வேகத்தோடும், ப்ரபரப்போடும், அவசரத் தோடும் உடனே கலக்க முடியாதபடி தன்னை ஏதோ தடுப்பது போல் உணர்ந்தான் முத்துராமலிங்கம். "அர்பனிலேஷன்' என்று சொல்லுகிறார்களே அந்த நகர மயமாக்குதல் தன்னிடம் இன்னும் நிகழவில்லை என்ப தாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

கல்லூரியில் படிக்கிற நாளிலிருந்து இந்தக் குருசாமி சேர்வைக்குத் தன் தந்தை புரிந்திருப்பதாகச் சொல்லிய உதவிகளும் உதவிய சந்தர்ப்பங்களும் நினைவு வந்தன. அதே குருசாமி சேர்வை இன்று தன்னை உதாசீனப்படுத்தி யதும் தன் தந்தையின் கடிதத்தை அலட்சியப்படுத்தியதும் அவனுக்கு எரிச்சலூட்டின. - g -

சர்க்கார் உத்தியோகத்துக்குப் போனபின் ஒருவர் விசுவாசம், பழமை பாராட்டல், எல்லாவற்றையும் கட்டிக் காப்பது சிரமசாத்தியமானதாயிருக்கலாம். தெரிந்தவர் கள், வேண்டியவர்கள். உறவினர்கள். இவர்களைக் காண்ப திலும், பேசுவதிலும். சொந்தம் கொண்டாடுவதிலும் உபசரிப்பதிலும் சராசரி இந்தியக் கிராமவாசியின் இயல் பான அக்கறை நகரவாசிக்கு இருப்பதில்லை. கிராமவாசி எதிலும் செயற்கையாயிருக்க முயலுவதில்லை. எதிலும் அரைகுறை அக்கறையோ முழு அக்கறையின்மையோ காண்பிக்க முயலுவதில்லை. ஆனால் நகரவாசியோ எல்லாப் பாசாங்குகளிலுமே தேர்ந்தவனாக இருக்கிறான். எதிலும் செயற்கையாயிருக்கிறான். ஒவ்வொரு கிராமவாசி யும் சென்னை பம்பாய், கல்கத்தா, டில்லி போன்ற ந்கரத்துக்கு வரும்போது தான் மனித உறவுகளை மதிக்காத செயற்கையான - போலியான சூழ்நிலையின் இடையே இருப்பதாக உணர்கிறான். -