பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

为_罗 நிசப்த சங்கீதம்

"முதல்லே வந்த லாரியிலேயே திரும்பணும்னு தான் இருந்தேன். இப்ப அப்படிச் செய்யப்போறதில்லே...'

"'என்னது? லாரியிலியா மெட்ராஸ் வந்தீங்க?'

"ஆமாம். உங்கப்பாவும் மத்த மந்திரிகளும் பதவி யேத்துக்கிட்டதைக் கொண்டாட லாரி லாரியாக்கிராமத்து அப்பாவி மக்கள் வேடிக்கை பார்க்க வந்தாங்களே அதுலே ஒருத்தனாத்தான் நானும் வந்தேன்." -

"லாரியிலே முந்நூறு மைல் பிரயாணம் பண்றது. ரொம்பக் கஷ்டமா இருக்குமே?' .

"சாதாரண மக்களுக்கு ரொம்பக் கஷ்டமா இல்லாத, துன்னு இன்னிக்கு இந்த நாட்டுலே என்னதான் மீதமிருக்கு'

邀解 鄰。黎

நாளைக்கோ உடனேய்ோ நான் மெட்ராலை விட்டுத் திரும்பப் போறதில்லே! இங்கே நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கு...' - -

"நாளைக்கு எங்க கார் மதுரை போகுது. டிரைவரைத் தவிர நான் மட்டுந்தான் தனியாப் போறேன். உங்களுக்கு.

ஆட்சேபணை இல்லாட்டி நீங்களும் வரலாம்.' -

தனக்கு அப்போது ஊர் திரும்புகிற உத்தேசம் இல்லை. யென்று முத்துராமலிங்கம் திட்டவட்டமாக அவளிடம் கூறி விட்டான். அவள் பர்மிங்ஹாம் யூனிவர்ஸிடியில் தான் பிஎச்.டி. பண்ணப்போவதைப்பற்றி, விவரிக்கத் தொடங். கினாள். இன்னும் இரண்டு மூன்று மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் தன் வெளிநாட்டுப் பிரயாணம் நேர லாம் என்றும் சொன்னாள். அவள் அப்பாவுக்கு அமைச்சர் என்ற முறையில் தலைநகரில் கிரின் வேய்ஸ் ரோடில் ஒதுக்கப்பட்டிருக்கும் பங்களாவின் மு. க வரி யை யும். டெலிபோன் நம்பரையும் அவனுக்குக் கொடுத்தாள். அவனுடைய முகவரியைக் கேட்டாள்.