பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 77

உண்மைதான்! ஆனால் நான் அதை உங்க பேச்சுக்கு எதிரா மட்டும் சொல்லலே...பொதுவா நேத்து மேடையிலே பேசின. அத்தனை பேரோட பேச்சுக்கும் எதிராகத்தான் சொன்னேன்.'

- "உங்களுக்கு ஏன் இத்தினி பிடிவாதம்?' .

'கருத்து வேறுபாடு என்பது பிடிவாதமல்ல."

சில கருத்து வேறுபாடுகள் உங்களுக்கோ உங்களைப் போலொத்தவங்களோட சொந்த வாழ்க்கைக்கோ உதவற

தில்லே." . . . . -

உடனடியான பிரயோசனங்களுக்காகவோ உதவி களுக்காகவோ, நீண்ட காலமாகக் காப்பாற்றி வந்த கொள்கைகளை அடகு வைக்கிறவன் விவேகி இல்லை... ஒரு விவேகியின் பிடிவாதத்தை பாமரர்கள் முரண்டு' என்று குறை கூறலாம். ஆனால் மற்றொரு விவேகியின் பார்வையில் அது ஞான வைராக்கியமாக விளங்கும்...'

'முரண்டுக்கும். பிடிவாதத்துக்கும்தான் சாமியாருங் களோட பாஷையிலே ஞானவைராக்கியம்’னு பேர் சொல்

லிக்குவாங்க...!" - .

"அது உங்க அபிப்பிராயம்! நான் ஒத்துக்கலை." - "இப்பிடி அபிப்பிராய பேதப்பட்டுக்கிட்டே நீங்க உங்க வாழ்க்கை பூரா வீணடிச்சுக்கப் போlங்க. உங்களை மாதிரிப் படிப்பு, பேச்சுத்திறமை, பெர்ஸனாலடியெல்லாம் உள்ள ஒருத்தர் எங்க கட்சிப் பக்கம் வந்தா ரெண்டே மாசத்திலே மந்திரியா ஆக்கிப்பிடுவோம்...' - .

எங்கே அப்பிடிப் பண்ணிடுவீங்களோன்னு பயந்து தான் உங்க பக்கத்திலேயே நான் வர்ரதில்லே...' - "ஏனாம்: இதிலே பயப்படறதுக்கு என்னா இருக் காம்...?' . -

"அயோக்கியர்களுக்கு நடுவே கிடைக்கிற தங்கச் சிம்மாசனத்தைவிட, யோக்கியர்களுக்கு நடுவே அவர்