பக்கம்:நிதர்சனங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 8

அவர்களை அடித்து நொறுக்க ஆத்திரத்துடன் கைகளை ஒங்கினார். மறு கணம், ‘ஆ . ஐயையோ!’ என்று பாம்பு கடித்து விட்ட மாதிரி அலறித் துடித்தார்.

ஓங்கிய கை ஓங்கியபடி அந்தரத்தில் நின்றது! அது பட்டன மா, இல்லை, கொக்கா? கூட்டமான கூட்டம் நீர் துளிப்படுகிறது!

இப்போது அவள்-அந்தத் தாய் உலகாளும் தாயாம் தேவி கருமாரி மாதிரியே சிரித்தாள்!

- ஓங்கிய சோற்றுக் கையைத் தாழ்த்த முடியாமல் வேதனையில் துடித்துக் கொண்டிருந்த குருக்கள் தலைக் குடுமி பிரிந்து புரள நடுங்கத் தொடங்கினார். இப்போது அவர் கண்ணுக்குத் தெரிந்த இந்தத் தாயையும் கண்ணுக்குத் தெரியாத அந்தத் தாயையும் மாறி மாறி மாற்றி மாற்றிப் பார்த்தார். அவரது கண்களினின்றும் பூம்புனல் வெள்ளமெனக் கண்ணிர் பாய்ந்தோடி அந்த ஏழை அன்னையின் பாதங்களிலே சரணடைந்தது ‘ஆத்தாளே! இந்தப் பாவிக்குக்கூட தரிசனம் தந்து...நோக்கு மனசு இளகிடுத்தா? அப்படின்னா நான் புண்ணியவான்தான்! பேஷ். பேஷ்! மெய்ம் மறந்த நிலையில் புலம்பிக் கொண்டே அந்தத் தாய்க்காரியின் பாதங்களிலே நெடுஞ்சான் கிடையாக விழுந்தார்!

சாமி. சாமியோ!’

அவள் பதறினாள் கதறினாள் தீயை மிதித்து விட்டாளா, என்ன?

குழந்தைகள் சிரித்தன. ஆகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/93&oldid=681111" இலிருந்து மீள்விக்கப்பட்டது