உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

103

இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும், ஒரே கருத்தை உடையவர்களாக இருக்கிறோம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் ஸ்ரீலங்கா பிரச்சினை அப்படியல்ல என்பதைத் தெரிவிப்பதற்கு முன்பு, நம்முடைய வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களை நான் தம்பி என்று சொல்வதா அல்லது நண்பர் என்று சொல்வதா என்றே தெரியவில்லை. இருந்தாலும்...

மாண்புமிகு டாக்டர் கா. காளிமுத்து : மாண்புமிகு தலைவர் அவர்களே, திராவிட இயக்கக் குடும்பத்திலே இருப்பவர்கள் சகோதரர்கள் என்ற உணர்வை நாங்கள் ஒப்புக் கொண்டபோது என்னைத் தம்பி என்றே அவர்கள் சொல்லலாம். (கைதட்டல்).

கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, என்னை அகதி என்று வர்ணித்த, அருமைத் தம்பி...

மாண்புமிகு டாக்டர் கா. காளிமுத்து : தலைவர் அவர்களே, அதற்கு முன்னாலே, என்னை “கிறுக்கன்' என்று வர்ணித்த 'முரசொலி' பத்திரிகையும் இருக்கிறது.

கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, நான் அப்படி வர்ணிக்கவில்லை. அப்படிச் சொன்னதாக ஏதாவது அந்தப் பத்திரிகையிலிருந்து எடுத்துக் காட்டினால், நான் வருத்தம் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். என்றைக்கும் நான் அப்படி எழுதியது கிடையாது. பேசியதும் கிடையாது

மாண்புமிகு மேலவைத் தலைவர் : மாண்புமிகு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், அமைச்சரும் அண்ணன், தம்பி உறவு கொண்டாடுவதற்கு நான் தடையாக இருக்கவில்லை பார்லிமெண்டரி முறையிலே அந்த வார்த்தைகள் அவசியம் இல்லை என்ற மரபு உலகத்திலே உண்டு. இலண்டன் பார்லிமெண்டிலே கூட தொகுதியைச் சொல்லித்தான் உறுப்பினர்களைக் குறிப்பிடுவார்களே யொழிய, பெயரைச் சொல்லமாட்டார்கள்.

கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, எனவே நிறைவேற்றப்படுகிற சர்வகட்சித் தீர்மானம் எப்படி