உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

நிதிநிலை அறிக்கை மீது

உரை : 22

நாள் : 3.4.1986

கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு தலைவர் அவர்களே, 1986-87 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர் நாவலர் அவர்கள் இந்த அவையில் வைத்துள்ளதையொட்டி கடந்த சில நாட்களாக நடைபெறுகிற விவாதங்கள் மூலமாக விமர்ச்சிக்கப்படுவதை தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னுடைய கருத்துக்களை இந்த அறிக்கையின்மீது கூற விரும்புகிறேன்

முதலில் மாண்புமிகு நிசியமைச்சர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த அறிக்கையில் "இந்தியா முழுவதும் தழுவிய வகையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைப் பொருளாதாரம் புதிய வரிகள் ஆயத் தீர்வை ஏற்றுமதி இறக்குமதி வரிகள் போன்றவற்றால் ஏற்படும் இன்றியமையாப் பண்டங்களின் விலை உயர்வு, உரம், இரும்பு, நிலக்கரி போன்றவற்றின் விலை உயர்வு, இரயில் போக்குவரத்துக் கட்டண உயர்வு, டீசல், பெட்ரோல் போன்ற எண்ணெய்களின் விலை உயர்வு போன்றவை, தமிழக அரசின் பொருளாதாரத் தையும் தமிழக மக்களின் பொருளாதாரத்தையும் பாதிக்கவே செய்திருக்கின்றன" என்கிற உண்மை இந்த அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டு, வேறு மாநில முதலமைச்சர்கள் எல்லாம் இப்படிப்பட்ட விலை உயர்வு அறிவிக்கப்பட்ட நேரத்தில், தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்திருந் தாலும் கூட, நம்முடைய முதலமைச்சர் அவர்களின் சார்பாக அப்படிப்பட்ட கண்டனங்கள் தெரிவிக்கப்படாவிட்டாலும்கூட, இது ஏழை எளிய நடுத்தரவர்க்கங்களைப் பாதிக்கக்கூடிய ஒன்று என்பதை மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்