உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

நிதிநிலை அறிக்கை மீது

வகுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை நானும் படித்துப் பார்த்தேன். அதற்குப் பிறகு அவர்கள் தந்திருக்கிற பெரிய புத்தகத்தில் நிதிநிலைக்கான குறிப்பையும் படித்துப் பார்த்தேன். அதில் 4வது பக்கத்தில் மாநில ஆயத்தீர்வை என்கின்ற குறிப்பு வரும்போது, 1985-86இல் திருத்த மதிப்பீட்டின்படி 230.82 கோடி ரூபாய் வருவாய் மாநில ஆயத்தீர்வை மூலம் அரசு பெறுகிறது. என்றும், 1986-87இல் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி 200.43 கோடி ரூபாய்தான் வரும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால், 30 கோடி ரூபாய் குறைவாகக் காட்டப் பட்டுள்ளது. அதற்குக் காரணம் என்ன என்று கூறும்போது, 1987 ஜனவரியிலிருந்து மீண்டும் மது விலக்குக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வர உத்தேசித்துள்ளதால், மாநில ஆய்வுத் தீர்வையின் மூலம் 30 கோடி ரூபாய் வருவாய் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனக்குள்ள சந்தேகம் எல்லாம் பட்ஜெட் மெம்மோரண்டத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் ஜனவரி 1987 இல் 1987இல் இருந்து மதுவிலக்கைக் கொண்டு வருவதால் 30 கோடி ரூபாய்

அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ள

புள்ளிவிவரம் சரியா அல்லது 1986–87 நிதிநிலை அறிக்கையில் மதுவிலக்கு நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம் அரசுக்கு 60 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்களே, நிதி அமைச்சர் அவர்கள், இதில் எது சரி என்பதை விளக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மற்றொன்று, இந்த அவையிலே ஓர் அமைச்சர் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. எம்.பி.எஸ். அவர்கள் அப்போது குறுக்கிட்டு சில விளக்கங்களைக் கேட்டார்கள். ஸ்ரீலங்காவிலிருந்து பாதிக்கப்பட்டு வருகிறார்களே தமிழ் அகதிகள், அவர்களுக்காக இதுவரை 555.47 லட்சம் ரூபாய் செலவிட அரசால் அனுமதிக்கப்பட்டது என்று அன்றைக்கு மாண்புமிகு அமைச்சர் திரு. இராமசாமி அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது திரு. எம்.பி.எஸ். அவர்கள் குறுக்கிட்டு, 1983இல் இருந்து இதுவரை செலவிடப்பட்ட தொகை குறித்து ஒரு துணை வினா கேட்டார்கள். மத்திய அரசு ஒதுக்கியுள்ள