128
நிதிநிலை அறிக்கை மீது
அறிவிப்பதையெல்லாம்
சந்தேகப்படுவதா என்றால், எங்களின் முன் அனுபவம் அப்படி இருக்கிற காரணத்தால், சந்தேகப்படுகிறோம்.
1979ஆம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசியது அண்ணா பத்திரிக்கையில் 2.12.1979 தேதியில் வெளியாகியிருக்கிறது. 'என் உயிர் இருக்கும் வரை, நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி அல்லது பதவியில் வேறு ஒருவரை உட்கார வைத்து நான் ஓய்வு எடுத்தாலும் சரி இதை இங்கே கோடிட்டுக்கொள்ள வேண்டும். வேறு ஒருவரைப் பதவியில் உட்கார வைத்துவிட்டு நான் ஓய்வு எடுத்துக் கொண்டாலும் சரி, என் இறுதி மூச்சு வரை மது விலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என்று என்னைப் பெற்ற அன்னைமீது உறுதி எடுத்துக்கொள்கிறேன்' என்று 1979ஆம் ஆண்டில் நமது மாண்புமிகு முதலமைச்சர் அன்றைக்கு சபதம் செய்தார்கள். பிறகு அது கைவிடப்பட்டது. கடைகள் திறக்கப் பட்டன. மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. இரத்து செய்யப்பட்டது.
மீண்டும் 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் என் உயிர்க்கொள்கையான மதுவிலக்கு மீண்டும் கொண்டு வரப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் உறுதியாகக் கூறப்பட்டது என்ற செய்தி 23.7.1984 அன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு செய்தி ஏடுகளில் வெளிவந்தது. அதற்குப் பிறகு பொதுத்தேர்தல் நேரத்திலும், தேர்தல் முடிந்த பிறகும் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர்கள் எல்லாம் மேடைக்கு மேடை பேசினார்கள். ஆனால் என்னவாயிற்று மதுவிலக்கைத் தளர்த்தி தாய்மார்களின் கண்ணீரைச் சிந்த வைக்கமாட்டேன் என்று தாய்மார்களின் கண்ணீரைக் காட்டி மதுவிலக்கைத் தளர்த்தமாட்டேன் என்று சொன்னதும் நம் முதலமைச்சர்தான். அதற்குப் பிறகும் இதைத் தீவிரப்படுத்து வேன் என்று சொல்லி, குடிப்பவர்களை நாடு கடத்துவேன் என்று சொல்லுகிற அளவுக்குச் சட்டம் கொண்டு வருவேன் என்று சொல்லி சட்டம் கொண்டு வந்ததும், அப்படிப்பட்ட சட்டம் கொடுமையானது, பயங்கரமானது, சர்வாதிகார நாட்டில்கூட இப்படிப்பட்ட சட்டம் இருக்காது என்று நாங்கள்