கலைஞரின் சட்டமன்ற உரைகள்
141
this exercise was done independently probably before the Commit- tee met on 17th July 1979 for Selection of candidates. Mr. D.V. Suresh Kumar has agreed that he has worked out the list (with the knowledge of the professor). The Committee has taken the above document and resolved that this document be handed over to the Vice-Chancellor immediately.
.
இது துணைவேந்தரிடத்திலே உடனடியாகத் தரப்பட்டது. இவ்வளவு தவறுகளை, மோசடிகளைப் பற்றிய உண்மைகள் துணை வேந்தரிடத்திலே தரப்பட்டன. இவ்வளவு கொடுத்தும் துணைவேந்தர் இவற்றின்மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாருக்கு இடம் தருவதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அல்லது யார் தூண்டுதல் மீது இந்த ஏற்பாடுகள்ண் செய்யப்பட்டன? எனக்குத் தெரியாது. ஆனால் இது சம்பந்தமாக ஆளுநரிடத்திலே கொடுத்த முறையீடு கவனிக்கப்படாத காரணத்தினால்,
ஒரு பத்திரிக்கைக்காரர், 'ஹரி என்பவர் என்று கருதுகிறேன்' அவர் உயர்நீதிமன்றத்திலே ஒரு வழக்கு தொடுத்தார். அதன்மீது உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளிக்கின்றபோது அது காலம் கடந்து கொடுக்கப்பட்ட வழக்கு என்று கூறி தள்ளுபடி செய்துவிட்டார்கள். ஆனாலும் தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதியும் அந்தத் தீர்ப்பில் சில குறிப்புகளை எழுதி அந்தத் தீர்ப்பின் நகலை ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதில் என்ன எழுதி அனுப்பியிருக் கிறார்கள் தெரியுமா?
In these circumstances when an allegation with regard to the tampering of marks of certain candidates has been brought to the notice of this Court, notwithstanding the fact this has taken place in the year 1979, in the interest of purity of academic atmosphere of the University and equality in the interests of the fairness and reputation of Madras University, we think the Chancellor (Governor) along with a copy of the Minutes which are kept in the sealed envelope for such action as the Chancellor may deem fit to take in this case.
இவ்வாறு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்த தீர்ப்பின் நகலை