உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

நிதிநிலை அறிக்கை மீது

It is true that I expressed my regret since it was pointed out by their Lordships of the Supreme Court that it is an irregularity and the Supreme Court was pleased to accept my apology. சுப்ரீம் கோர்ட் என்னுடைய அப்பாலஜியை ஏற்றுக்கொண்டு விட்டது. மன்னிப்பை ஏற்றுக்கொண்டு விட்டது என்று ஹைகோர்ட்டில் சொல்கிறார். அது மாத்திரமல்ல.

'I submit that since it is true that the handwriting is mine and since the Supreme Cout pointed out that such procedure is irregular. I sincerely expressed regret'

என்று அவர் ஒத்துக்கொண்டார். ஆகவே இது பிரின்சிபாலே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஒத்துக்கொண்ட தகவல். இன்னும் சொல்லப்போனால், நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார். வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த முறைகேட்டிற்கு அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவருக்கு ஏதோ நல்லாசிரியர் விருது தரப்பட்டதாக நான் பத்திரிகையில் செய்தி பார்த்தேன். அது உண்மையோ அல்லது தவறோ எனக்குத் தெரியாது

து.

இறுதியாக, நான் ஒன்றிரண்டை மட்டும் சொல்லி முடித்துக்கொள்கிறேன். இந்த அரசை நான் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். எரிச்சல் கொண்டு பேசுவது, அல்லது யாரையும் பழிவாங்குவது என்கிற முறையில் இந்த அரசு தன்னுடைய தொடர் பயணத்தை அந்த வகையில் நடத்தாமல், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று நான்

கேட்டுக்கொள்கிறேன். மாதவரம் பால் பண்ணைத்

தொழிலாளர்கள் மீது பழி வாங்குகிற போக்கு, ஒரு நீதி மன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் இன்னும் நீடிக்கிறது. அது முறையல்ல. அந்தத் தொழிலாளர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க வேண்டுமென்ற நிதியமைச்சர் அவர்களை நான் இந்த அவையிலே கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் தலைமைச் செயலக ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு அவர்களைத் தற்காலிகமாகத் தள்ளிவைத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்று அச்சுறுத்தல் இவைகளிலிருந்து