உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

நிதிநிலை அறிக்கை மீது

என்று மிரட்டியிருக்கிறார். நகராட்சித் தலைவர் ஒருவர் நகராட்சிப்பள்ளி விழாவுக்குச் செல்வது என்பது அவ்வளவு பெரிய குற்றமா? அப்படியென்றால் இப்போது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நகராட்சித் தலைவர்களை, ஊராட்சி ஒன்றியத் தலைவர்களை இந்த அரசு எப்படி நடத்தப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடாதா என்று கூற விரும்புகிறேன். எனவே இந்த நிலைமைகளை எல்லாம் விட்டுவிட்டு அரசு செம்மையாக, சீராக ஆட்சியை நடத்த வேண்டும். அதற்காகத்தான் இத்தனை குறைபாடுகளை நான் எடுத்துக்காட்டினேனே தவிர, வேறு அல்ல என்று தெரிவித்துக்கொள்வதோடு, இன்னும் நிறைய பேச வேண்டும் என்று நான் விரும்பினாலும், இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் 11 பேர்களைப் பற்றியும்........

இன்னும் அதிகமாகச் பேச விரும்பினாலும் எனக்கு இருக்கிற சங்கடமெல்லாம் நான் ஏதாவது பேசப் போய், 11 பேர் பதவி விலகி இருக்கிற நேரத்தில், அந்தப் பழி என்மீது வந்து சேரக்கூடாது என்ற எண்ணத்தில் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன் என்பதைத் தெரிவித்து முடிக்கிறேன்.

வணக்கம்.