உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

நிதிநிலை அறிக்கை மீது

எப்போது மக்கள் நிதிநிலை அறிக்கை, மக்கள் நல ஆதரவு நிதிநிலை அறிக்கையாக ஆகிறது என்று கேட்டு அதற்குப் பதில் அளிக்கிறது, மாநிலத்தில் ஒரு எதிர்க்கட்சி அரசு அமைந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது தான் என்பதாக.

-

“Hindu” 27-3-1989 பத்திரிகை

"Poll promises fulfilled” என்ற தலைப்பில்.

"The Chief Minister Karunanidhi, on Saturday, announced a number of welfare measures in the Budget for 1989-90 in fulfilment of the promises made in the D.M.K. Election manifesto" என்று குறிப்பிடுகிறது.

“News Today” என்ற ஏட்டில் 27.3.1989இல் "Welfare- oriented Budget” என்ற தலைப்பில்,

"The Tamil Nadu Government was faced with three prob- lems a precarious financial position, and urgency for encouraging an improvement in the development exercise and the need to redeem the Election promises. It should be said to the credit of the D.M.K. Government that its Budget for 1989-90 is charted specifi- cally to tackle these three issues to a creditable extent.” அதாவது, தமிழக அரசு மூன்று பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு புறம் கடுமையான நிதிப் பற்றாக்குறை, மறுபுறம் வளர்ச்சிப் பணிகளில் தீவிரம் காட்டவேண்டிய அவசியம், இவை எல்லாவற்றிற்கும் மேலாகத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய கட்டாயம், இந்த இக்கட்டான பிரச்சினைகளைத் தி.மு. கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சாமர்த்தியமாகச் சமாளித்ததோடு மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்புக்கும் ஈடு கொடுத்து அமைந்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கின்றது.

அதனையொட்டித்தான் இங்கே பல்வேறு கட்சிகளின் சார்பில், எதிர்க்கட்சியின் சார்பிலே பேசிய உறுப்பினர்களே கூட இந்த நிதிநிலை அறிக்கையிலே பலவற்றை வரவேற்றுப் பாராட்டிப் பேசியிருக்கின்றார்கள்.