152
நிதிநிலை அறிக்கை மீது
நிலப்பகுதிகளும் இணைந்து சுதந்திர இந்தியாவாக விளங்கும், அரசியல் நிர்ணய சபை தீர்மானிக்கிறபடியான எல்லைகளைக் கொண்டோ அல்லது இப்போதுள்ள எல்லைகளுடனோ அவை அரசியல் சுயாட்சி உள்ள அமைப்புச் சட்டத்தின்கீழ் தனித்த
வேறு வெளியே உள்ள பகுதிகளும்
பகுதிகளாகச் செயல்படும், எஞ்சிய அதிகா அதிகாரங்களும் அப்பகுதிகளுக்கே அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், அவைகள் அனைத்தும் மறந்து போனவைகளாக, மறுக்கப்படக் தொடர்ந்து கூடிய கொள்கைகளாக காங்கிரஸ்காரர்களால் ஆகிவிட்டன என்பதை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்களும், நாட்டிலே உள்ள அரசியல்வாதிகளும் மிக நன்றாக அறிவார்கள்.
ஆனால், நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே அமைத்த இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இராஜமன்னார் குழு, அந்த குழுவினுடைய பரிந்துரைகளை இந்த அவையில் 1974ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மானம் தொடர்ந்து இன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், மாநிலங்கள் சுயாட்சித் தன்மையோடு முழுமையான சுயாட்சித் தன்மையோடு விளங்கவேண்டுமென்கிற குரல் பரவத் தொடங்கியிருக்கிறது. கர்நாடகத்தில், கேரளாவில், ஆந்திராவில், மேற்கு வங்கத்தில், அஸ்ஸாமில், அரியானாவில் என்று இப்படிப் பல்வேறு மாநிலங்களில் உருவாகியிருக்கிற, உரக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கிற இந்தக் இந்தக் குரல் எதிர்க்கட்சிகளுடைய ஆட்சிகள் ஆட்சிகள் இல்லாத, காங்கிரஸ் ஆட்சிகள் இருக்கிற மாநிலங்களில் கூட பரவத் தொடங்கி யிருக்கிறது.
இதைத்தான் அண்ணா அவர்கள் அன்றைக்கே சொன்னார்கள்: இந்தக் கருத்தை வைத்து உடனடியாக நான் ஒரு பெரும் போராட்டம் நடத்த விரும்பாவிட்டாலும்கூட மாநிலங்கள் அதிக உரிமை பெறவேண்டும். மாநில சுயாட்சி பெறவேண்டுமென்ற இந்தக் கருத்தைப் பரப்புகிற பணியையே
ஒரு போராட்டமாக இந்தியா முழுவதும் நடத்த
வேண்டுமென்று அண்ணா அவர்கள் அன்று தன்னுடைய மரணத்தறுவாயில் எழுதிய இறுதிக் கடிதத்தில் 'ஹோம் லேண்ட்' பத்திரிகையில் குறிப்பிட்டார்கள். அதையொட்டி