உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

157

இந்தச் சூழலில் வழக்கமாக மாநில அரசு மேற்கொள்ளுகிற வேளாண்மை வளர்ச்சித் திட்டம், கல்வித்திட்டம், மீன் வளர்ப்புத் திட்டம், வனவளத் திட்டம், நீர்ப்பாசனத் திட்டம், மின் இணைப்புத் திட்டம், தொழில், மக்கள் நல்வாழ்வுத் திட்டம், சத்துணவுத் திட்டம் போன்ற வழக்கமான திட்டங்களைச் செயல்படுத்துவதில், ஒழுங்காகச் செயல்படுத்துவதில், முனைப்பாகச் செயல்பட வேண்டிய இந்த அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறது. அப்படி நிறைவேற்றுகிற வகையிலேதான் ஆளுநர் உரையிலே பேசும்போது பல உறுப்பினர்கள், எதிர்க்கட்சியின் சார்பிலே பேசிய பல உறுப்பினர்கள் கூட, தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் எங்கே, எங்கே என்றெல்லாம் கேட்டார்கள் நாம் அந்தத் தேர்தல் வாக்குறுதிகளை எந்த அளவிற்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை ஓரளவு சுருக்கமாக எடுத்துக் கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

எம்.ஜி.ஆருடைய ஆட்சியில் கடன்களை ரத்து செய்திருக்கிறார். உண்மை. ஆனால் அப்படி ரத்து செய்த கடன்களுக்காக கூட்டுறவு சொசைட்டிகளுக்குக் கட்ட வேண்டிய பாக்கித் தொகை 67 கோடி ரூபாய் இன்னமும் கட்டப்படவில்லை. அதை கட்டவேண்டிய பொறுப்பு நம்முடைய தலையிலே விழுந்து இருக்கிறது என்பதை அறிக்கையிலேயே நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அது மாத்திரம் அல்ல, இப்போது விவசாயிகளுக்கு இந்த அரசு அறிவித்துள்ள கடன் ரத்தின் மூலம், மேலும் ஒரு 39 கோடி ரூபாய் நாம் அந்த சொசைட்டிகளுக்குக் கட்ட வேண்டி யிருக்கிறது. அதுவும் அரசுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு சுமை. கைத்தறியாளர்களுடைய சொசைட்டிக்குக் கடந்த ஆட்சியில் ரிபேட் கொடுக்கவேண்டிய பாக்கி 3 ஆண்டுகளுக்கு 26.15 கோடி. அதையும் நாம்தான் பொறுப்பு ஏற்க வேண்டி யிருக்கிறது. தற்போது ரிபேட்டாக சேர்க்கப்பட்டுள்ளது 15 கோடி. அதையும் நாம்தான் தரவேண்டும், இந்த ஆட்சியில். அரிசி விலையை மத்திய சர்க்கார் திடீர் என்று உயர்த்தியதால் சப்சிடி கொடுக்கிற வகையில் 23 கோடி ரூபாய் கூடுதலாக நாம் செலுத்த வேண்டியது இருக்கிறது. ஆக மொத்தம் 170 கோடி ரூபாய் ஒரு புதிய சுமை. கடந்த பல ஆட்சிதொட்டு