உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

நிதிநிலை அறிக்கை மீது

அதிபர்கள் அப்பீல் செய்து கொண்டார்கள். அதற்கிடையில் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது உங்களுக்குத் தெரியும். ஆக, நாங்கள் கொண்டு வந்த தேசிய மயமாக்கும் கொள்கையை எதிர்த்து, 'ஹைகோர்ட்டிலே' வழக்குப் போட்டபோது உயர்நீதிமன்றம் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்துப் பேருந்து முதலாளிகள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். அந்த நேரத்திலே கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. ஆக, கலைக்கப்பட்டதற்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு வேடிக்கையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

ஏகப்பன் என்கிற ஒருவர் ஒரு வழித்தடத்திற்காக ஒரு அப்பீல் செய்கிறார். மதுரை குமுளி என்ற ஒரு பெரிய வழித்தடத்திற்குத் தனக்கு உரிமை வேண்டுமென்று கேட்டு அப்பீல் செய்கிறார். அரசு அதை எதிர்க்கிறது. அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. அரசு ஏகப்பன் என்ற தனி பஸ் முதலாளியினுடைய அந்தக் கோரிக்கையை எதிர்க்கிறது. அவர் 'எஸ்.டி.ஏ.டி.க்கு, செல்கிறார். அங்கே அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கிறது. உடனே அரசு அதை எதிர்த்து ஹைகோர்ட்டுக்குச் செல்கிறது. ஹைகோர்ட்டிலே ஏகப்பனுக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கிறது. உடனே அரசு அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் ஏகப்பனுக்கு விரோதமான தீர்ப்பு; அரசுக்குச் சாதகமான தீர்ப்பு. அரசு என்ன செய்திருக்க வேண்டும்? 'ஏகப்பா; போப்பா' (சிரிப்பு) என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லவில்லை. ஏகப்பனுக்குப் பாதகமாகத் தீர்ப்பு கிடைத்ததற்குப் பிறகும் சுப்ரீம் கோர்ட்டில் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்த பிறகும், ஏகப்பனுக்குச் சாதகமாக அந்த வழித் தடத்தைத் தருகிறது. அதற்கு எதற்காக அந்த வழக்கு? ஏன் சுப்ரீம் கோர்ட் வரையிலே போகவேண்டும்? இது ஒரு தேசியமயக் கொள்கை. இது அவர்களைப் பொறுத்த வரையிலே ஒரு தேசியமயக் கொள்கை, அவர்கள் அன்றைக்கு அதை நிறைவேற்றினார்கள்

இதற்கிடையிலேதான் 3 பேருந்துகளை, 5 பேருந்துகள் என்று மாற்றினார்கள். அதிலும்கூட சில வழித்தடங்கள் விடப் பட்டன. அதிலே பல கட்சிக்காரர்கள்கூட 5 பஸ்கள் இருந்து