உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

நிதிநிலை அறிக்கை மீது

பாடுபட்டதாகச் சொல்லும் காங்கிரஸ் கட்சியிலிருந்து எத்தனை பேர் இங்கே வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள் என்று நாம் பார்க்கிறோம், ஆக. அவர்கள்தான் கணக்கைச் சொல்ல வேண்டும். ஆக, வன்னியருடைய எதிரி கருணாநிதி என்று சொல்லியும்கூட, கழகம்தான் என்று சொல்லியும்கூட, 24 வன்னியர்கள் இங்கே தி.மு.க. சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக வந்திருக்கிறார்கள். எனவே, வன்னியர் சமுதாயத்தினரையும் எங்களையும் மோத விட்டு வேடிக்கை பார்க்க யார் எண்ணினாலும் அது நடவாது. வன்னியர் சமுதாயம் மாத்திரமல்ல. தமிழ்நாட்டிலே உள்ள எந்த ஒரு சமுதாயத்துடனும் தி.மு.க.வை மோத விட முடியாது. காரணம் இது ஒரு சமுதாய இயக்கமாக இருக்கிறது. இதனுடைய அடிவேரே, ஆணி வேரே தந்தை பெரியார் அவர்களால் ஊன்றப்பட்டது. அவர்களால் அடி வேரும், ஆணி வேரும் வளர்க்கப்பட்டது. பிறகு அது செழித்து வளர்வதற்குரிய முயற்சி பேரறிஞர் அண்ணா அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, இந்த ஆணி வேரும், இந்த பெரும் தருவும் யாராலும் வீழ்த்தப்பட முடியாத சமுதாய தருவாக இருக்கிறது. முதலிலே எங்களுக்கு சமுதாயம், அடுத்து பொருளாதாரம், அடுத்துதான் அரசியல், எனவேதான் ஆட்சியைக் கலைக்கிறோம் என்று யார் யாரெல்லாமோ மிரட்டும் போதெல்லாம்கூட போனால் பரவாயில்லை. என்று நாங்கள் சொல்வதற்குக் காரணம் நாங்கள் எல்லாம் ஆரம்பத்தில், தொடக்கத்தில் அரசியலுக்காக எங்களை எல்லாம் ஒப்படைத்தவர்கள் அல்ல.

எங்களுடைய வீட்டிலே எங்கள் தாயிடத்தில் வாய்க்கரிசி போட்டுக் கொண்டு வெளியே கிளம்பும் போதெல்லாம் சமுதாயப் பணியாற்றுவதற்காக கிளம்பியவர்களே தவிர, வேறு எதற்காகவும் அல்ல. அதுதான் பெரியார் அவர்களுடைய, பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கொள்கை.

அந்தக் கொள்கைகளுக்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. எனவே எந்தச்

சமுதாயத்தையும் எங்கள் மீது விரோதமாகத் தூண்டிவிட யார் எண்ணினாலும், அது நடவாது. நாங்கள் கொண்டு வந்த இந்த இட ஒதுக்கீடு பற்றி மாண்புமிகு உறுப்பினர் திரு. பூவராகன்