200
நிதிநிலை அறிக்கை மீது
அமைப்பதற்காணத் திட்டம்; கைத்தறி நெசவாளர்களுக்குக் கைத்தறியுடன் கூடிய 2 ஆயிரம் வீடுகள்; புதிய தொழில் முனைவர்களுக்கு விற்பனை வரிச் சலுகை; பல்வேறு புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள்; சாலைகள் ஏற்படுத்துவதற்கான திட்டம்; இன்னோரன்ன, பல மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தும்கூட, எந்தத் திட்டமும் இல்லை யென்றுதான் எதிர்க்கட்சியின் சார்பிலே விவாதம் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய என்னுடைய நண்பர், காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர் திரு. பீட்டர் ஆல்போன்ஸ் அவர்கள் ஒரு கவிதையைக்கூட படித்தார்.
“தமிழ் என்கின்ற தங்கச் சீப்பு எப்போதும்
உள்ளது உங்கள் கைகளில்'
என்று அதை ஒத்துக் கொண்டார்.
'இருந்தும் பயன் என்ன?
நீங்கள்தான் ஒவ்வொரு நாளும் உங்களில் சில தமிழர்களை மொட்டை அடிக்கிற முயற்சியில் உள்ளீர்களே'
ய
என்று, யாரோ எழுதிய கவிதையோ அல்லது அவரே சொந்தத்தில் எழுதிய கவிதையோ தெரியாது: அதைப் படித்துக் காட்டினார்; ஆக, தங்கச் சீப்பு தமிழ்; அது என் கையிலே இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டார். சீப்பு எனக்கு இப்போது பயன்படுவது இல்லை, அதிகமாக. (சிரிப்பு) திரு. பீட்டர் ஆல்போன்ஸ் போன்றவர்களுக்குப் பயன்படுவதற் காகத்தான் அந்தத் தங்கச் சீப்பு என்னுடைய கையிலே இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). பயன்படும் என்று நம்புகிறேன்.
நம்முடைய நண்பர் திரு. செங்கோட்டையன் அவர்கள் ஒரு உவமையின் மூலமாக இந்த வரவு-செலவுத் திட்டத்தை வர்ணித்தார்.
“ஆழ்கடலிலே மூழ்கி முத்துக்களை
முதலமைச்சர் எடுத்து வருவார்”