கலைஞரின் சட்டமன்ற உரைகள்
205
அளவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. அதை அறிக்கையிலே நான் குறிப்பிட்டு இருக்கிறேன். அதாவது மற்ற மாநிலங்களுக் கெல்லாம் 37.575 சதவீதம், பற்றாக்குறை மாநிலங்களுக்கு 7.425 சதவீதம் என்று அது மாற்றப்பட்டு விட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்கெனவே கிடைத்துவந்த அதாவது 7வது, 8வது நிதிக் குழுவில் கிடைத்து வந்த 40 சதவீதம் என்கிற பங்கு 37.575 என்ற சதவீதமாகக் குறைந்துவிட்டது எனவேதான் அறிக்கையிலே நான் ஒரு கருத்தைத் தெரிவித்து இருக்கிறேன். மத்திய அரசுக்கு, மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும் பங்கை 50 சதவீதமாக உயர்த்தி அதில் எல்லா மாநிலங்களுக்கும் 42.5 சதவீதம் என்று வழங்கிவிட்டு ஏற்கெனவே இருந்த 40க்கு மேலே 2.5 என்று, அதாவது 42.5 சதவீதமாக வழங்கிவிட்டு - எஞ்சிய 7.5 சதவீதத்தை ஏற்கெனவே கொடுத்த 5க்கு மேல் 2.5 என்று உயர்த்தி பற்றாக்குறை மாநிலங்களுக்கு அளிக்கலாம் என்ற கருத்தை மத்திய அரசுக்கு நம்முடைய நிதிநிலை அறிக்கையின் மூலமாக நான் தெரிவித்திருக்கிறேன். அதையே கடிதமாக பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும், மத்தியிலே உள்ளவர் களுக்கும் நான் தெரிவித்திருக்கிறேன்.
9வது நிதிக் குழு தமிழ் நாட்டின் வருவாய் ஆதாரங்கள், திட்டத்திற்கு அப்பாற்பட்ட செலவுகள் ஆகியவற்றை எல்லாம் கணக்கிடும்போது ஒரு பெரிய தவறு செய்திருக்கிறது. என்ன தவறு என்றால் தமிழ்நாட்டினுடைய வரவு-செலவில் உபரியாகப் பணம் இருக்கும் என்ற ஒரு தவறான கணக்கை 9வது நிதிக் குழு தொடங்கி, அந்த உபரித் தொகையையும் மிக அதிகமாகக் கணக்கிட்டு, மின்சார வாரியத்திற்கு நாம் வழங்குகிற மானியம், உணவுக்கு நாம் தருகின்ற பல கோடி ரூபாய் மானியம், இதைப் போன்ற மானியத் தொகைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உபரித் தொகை அதிகமாக இருக்கும் என்ற பொருத்தமற்ற வாதத்தை 9வது நிதிக் குழு ஆரம்பித்து, சாதாரணமாக திட்டம் சம்பந்தமாக மத்திய அரசினுடைய மானியம் அல்லது கடன் ஆகியவற்றை மத்திய திட்டக் குழுதான் ஒதுக்கீடு செய்யும் என்ற நிலைக்கு மாறாக தன்னுடைய கருத்தை 9வது நிதிக் குழு அறிவித்திருக்கிறது. 5
ய
5