218
நிதிநிலை அறிக்கை மீது
பணத்திலேயிருந்து மானியமாகவோ அல்லது குறியீட்டுக் கடனாகவோ தாட்கோ வழங்குகிறது. தனிப்பட்டவர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் இத்தொகை வழங்கப்படுகிறது. இதுகாறும் இது சிறிய தொகையாக ஐ.ஆர்.டி.பி. முறைப்படி செலவிடப்பட்டது. இதனால் தாழ்த்தப்பட்டவர்களுடைய பொருளாதாரக் குறிப்பு பொருளாதாரம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் மேம்பாடு அடையவில்லை. எனவே, 1989 நவம்பர் திங்களில் தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை வகுத்தது.
ய
அந்தத் திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு கொடுக்கும் பணத்தில் ஒரு பகுதியை ரூ. 15,000, 20,000 என்று கடன்களாக கொடுக்கின்ற அந்த நிலையும் உண்டு. அதோடு இன்னொரு புதிய நிலையை எடுத்து ஒரு பகுதியைத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் ஆர்வமுள்ளவர் களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வரை சிறு தொழில்களை உருவாக்கி, அதன் மூலம் அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவது தான் அந்தத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது.
4
ஐந்து இலட்சம் ரூபாய் திட்டம் வகுத்து நான்கு இலட்ச ரூபாய் வங்கியிடம் கடன் பெற வேண்டும். அதற்கு வங்கி கோரும் 25 பர்சென்ட் தொகையைத் தனி நபர்கள் கொடுக்க இயலாததால் தாட்கோ அதனை 15,000 ரூபாய் மானியமாகவும் 85,000 ரூபாய் பத்து வருஷங்களுக்கு 4 சதவீத வட்டிக்கான கடனாகவும் கொடுக்கிறது. இது இந்தியாவிலேயே தமிழகத்திலேதான் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆரம்பத்தில் வங்கிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கடன் கொடுக்கத் தயங்கின. தாழ்த்தப்பட்டவர்களாயிற்றே என்று பிணையம் கேட்டார்கள். உடனடியாக 23.2.1990 இல் வங்கித் தலைவர்களையும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளையும் நம்முடைய ஆதிதிராவிடர் நலச் செயலாளர் அழைத்துப் பேசி, தாழ்த்தப்பட்டவர்கள் சிறு தொழில் அதிபர்களின் நிலைக்கு உயர வேண்டுமேயானால் பிணையம் இல்லாமல் அவர்களுக்கு
கடனுதவி வழங்க வேண்டுமென்று